அப்பாவின் பாஸ்வேர்ட்

எங்கேயும் எப்போதும் காணக்கிடைக்கிற மத்யதர வர்க்க மனிதர்களின் குறுக்குவெட்டுச் சித்திரங்கள்தான் ஆத்மார்த்தியின் இக்கதைகள். மனித மனங்களின் நிறந்தரமற்ற அலைக்கழிதலும், ஒவ்வாமைகளும், அதன்மீதான சமரசங்களும் இக்கதைகளின் மைய இழைகளாக இருக்கின்றன. ஆத்மார்த்தி உருவாக்கும் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளால் கடது செல்ல முற்படுபவை.நிராசைகளின் வெட்டவெளியில் தம்மைப் பொருத்திக்கொள்பவை.இது ஒரு NCBH பதிப்பகத்தின் வெளியீடு.