உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா
நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ

  ராஜா  
ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட குரல் இந்தக் காலகட்டத்துக்கான காற்றா வருடுது. கபிலன் கூச்சலற்ற வார்த்தைகளால இசை பேச வேண்டிய இடத்துல சொற்களை மௌனிச்சு அதனூடா சொற்களைப் பேசவைக்கிற லாவகத்தோட எழுதிருக்கார். அதுவும் ராஜாவோட தனித்துவம் எப்பவுமே ஒரு பாட்டை ஆரம்பிக்கும் போது ஆர்ப்பாட்டம் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு கதவாத் திறந்துகிட்டே போய் ஒரு பழக்கமான மூலையில் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்ததும் அது வரைக்குமான இருள் விலகி வெளிச்சமாகுறாப்ல அவரோட பாட்டோட ஆரம்பம் அமையும். இந்தப்பாட்டுலயும் பல்லவியோட முதல் ரெண்டு வரிகளை இணைக்காம ரெண்டு முறை பாடுற ஸ்ரீராம் மூணாவது முறை மெழுகா அப்டின்னு சொன்னமாத்திரத்தில் நெஞ்ச உதச்சி அப்டின்னு கனெக்ட் செய்து அழைத்துச் செல்வது செமையான ட்ரீட்மெண்ட். இன்னும் ஆழத்துல ராஜாவோட தனித்துவமா முதல் வரியின் இறுதி வார்த்தையான மெழுகா அப்டின்ற சொல் அங்கே வாக்கியப் பூர்த்தியோட அதிகரிச்சி வர்ற கூடுதல் சொல். அது தான் பல்லவியோட பேரழகா மாறுது.சித் ஸ்ரீராமோட குரல்

பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையிலான இசை ராஜாவோட முந்தைய பாடல்கள் பலதும் அவை வெளியாகும் போது மொத்தமா மனசைக் கொல்லும். எங்கேருந்துடா அடிச்சாரு இப்படி ஒரு ம்யூசிக்கை அப்டின்னு அதிசயிக்க வைக்கும். பிரிச்சு சீர்தூக்கிப் பார்த்தா ரொம்ப பலமான எந்த இசைக்கோர்வையுமே இருக்காது. என்னைத் தாலாட்ட வருவாளா இரவு பகலைத் தேட ஒளியிலே தெரிவது தேவதையா இளங்காத்து வீசுதே அப்டின்னு இப்படியான பாடல்களை தனியா எடுத்து அடுக்குனா கார்த்திகை தீபங்களை வரிசையாக்கி வச்சா மாதிரி ஜொலிக்கும்.
இந்தப் பாட்டுலயும் தேவையில்லாத எந்த ட்யூன் டாமினேஷனுமே இல்லாம மென்மையான காற்றுக்கேற்ப ஒரு விளக்கோட ஜோதி மெல்ல நடனமாடுமில்லையா அதையே இசைவழியா பாட்டா சாத்தியப்படுத்தி இருக்கிறது தான் சிறப்பு.

கபிலன் பேனா

தாயின் குரலோ அப்டின்ற சொற்கள் இன்னும் பல வருசங்களுக்கு நின்னு ஒலிக்கும். ஆகக் கடினம் இயல்பான வார்த்தைகளிலேருந்து பாடல் புனைவது தான்.
உலகின் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே  அப்டின்றது கதையை ஒரு யூகப்புதிரா முன்வச்சி நகருது. பாதை போனாலும் பாதை நீதானே என்றாகையில் இளமனங்களின் கூட்டுப் பிரார்த்தனையா மாறும் இந்தப் பாடலோட பேரழகு வாக்கியம்
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
.
இந்த வரி இளையராஜாவும் கபிலனும் சித் ஸ்ரீராமும் வாசிச்ச இசைக்கலைஞர்கள் அத்தனை பேருமா இந்தப் பாட்டை பகிர்ந்துக்கிற இடமா மாறுது. காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை அப்டின்றதை இனிமேல் தன்னைத் தவிர வேற யார் பாடினாலும் அது தன்னொடதாகவே இருக்கணும்னு உயிரை அதுல கலக்குறார் சித் ஸ்ரீராம். அதே போல காதலின் ஆகச்சிறந்த இசைவழி வாக்கியங்கள்ல ஒன்றாக இதை மாத்திட்டார் கபிலன்.

இளையராஜா வழக்கம் போலவே கேப்டன் ஆப் தி ஷிப்

திசையைத் தீர்மானிக்காத கடற்பயணம் மாதிரி தன்னை அதிகரிச்சித் தர்ற பாடல் ரொம்ப நாளைக்குப் பிறகு மனசை முழுசா வருடுது.
மிஷ்கினோட சைக்கோ படமா வர்றப்ப இந்தப் பாட்டை எப்போ வரும்னு ரசிகன் காத்திருப்பான். வர்ற வரைக்கும் தேடுவான்.வரும் போது காட்சிகளாகவும் தன் மனசுக்குள்ளே நிரப்பிப்பான். நானும் அப்படியான ரசிகன் தான்