Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

யாக்கை 3

பாம்பும் புலியும் இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில… Read More »யாக்கை 3

யாக்கை 2

யாக்கை 2 செல்வச் சர்ப்பம் “யாராலயும் நடந்த கொலையை மாத்த முடியாதின்னாலும் இனி நடக்கப் போறதையாச்சும் நல்லதாக்க முடியும்லண்ணே..? நாஞ்சொல்றதைக் கேளு. கர்த்தர் இன்னமும் உனக்கான வெளிச்சத்தை விட்டு வச்சிருக்கார். நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தைன்னா மத்ததெல்லாம் நல்லா நடந்துறும்ணே…இதுக்கு… Read More »யாக்கை 2

யாக்கை 1

யாக்கை 1 பைத்தியப் பொழுது தன் கையில் இருக்கும் பச்சை நிற ஃபைலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் எம்.எஸ். தகவல்களை ஒவ்வொன்றாகப் படித்தார். கொலையில் ஈடுபட்டது மொத்தம் ஐந்து பேர். 56 வயதுக்காரன் இருதயம் தான் தலைவன். இருப்பதில் இளையவன் பெயர்… Read More »யாக்கை 1

27 காதல் கவிதைகள்

இவை புதிய தலைமுறை இதழில் வெளியானவை. இதை வாசித்துக் காதலில் ஆழ்ந்து இன்புறுங்கள். காதலின் துன்பமே இவ்வுலகின் ஆகச்சிறந்த இன்பம். இசையும் காதலும் நிஜமற்ற பொய்கள். வாழ்க காதல். வாழ்தல் இனிது 1 ஒரு காதல் கடிதத்தை  எப்படித் தொடங்குவது என்பது… Read More »27 காதல் கவிதைகள்

மூன்று படங்கள்

சமீபத்தில் காண வாய்த்த மூன்று படங்கள் இவை மலையாளத்தில் புலனாய்வை அடிப்படையிலான குற்றப் பின்புலப் படங்கள் அதிகம் எடுக்கப் படுகின்றன. தமிழில் அத்தி போல் எப்போழ்தேனும் பூக்கும். சமீபத்தில் காணக் கிடைத்த இரண்டு படங்கள் ஒன்று தலவன். இன்னொன்று கோளம். இரண்டுமே… Read More »மூன்று படங்கள்

குமுதம் சிறுகதை

குமுதம் சிறுகதை   இந்த வாரக் குமுதம் இதழில் எனது சிறுகதை “சபாட்டினி” வெளியாகி உள்ளது. இதற்கான ஓவியத்தை எழுதியிருப்பவர் ஓவியர் ஸ்யாம். குமுதம் இதழுக்கு நன்றி!!

எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்

எனக்குள் எண்ணங்கள் 15 ரசிகன் மதுரையில் ஒவ்வொரு தியேட்டருக்கும் எனக்குமான தனித்துவமான உறவு மெச்சத்தக்கது. என் முதல் திரைப்படத்தை பாட்டியோடு சென்று பார்த்த சாந்தி தியேட்டர் எனக்கு ஏழெட்டு வயதாக இருக்கும்போதே மூடிவிட்டார்கள். அடுத்து குடியிருந்த சிம்மக்கல் வீட்டில், கூப்பிடு தூரத்தில்… Read More »எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்

சாலச்சுகம் 19

அன்பை அளவிடுதல் என்னிடமிருப்பது தாங்க முடியாத பேரன்பு. எப்படியானதென்றால் “விற்கப் பண்டங்களைச் சுமந்துகொண்டு வீதிவழியே வருபவள் வெயில் பொழிவின் நடுவே கிடைக்கும் சின்னஞ்சிறு நிழலடியில் தலைச்சுமையை இறக்கித் தரையில் கிடத்தி விட்டுச் சற்றே கண்ணயர முனைகிறாள். நொடிப்பொழுதில் அரிதினும் அரியவொன்றைக் களவுகொடுக்கிறாற்… Read More »சாலச்சுகம் 19

எனக்குள் எண்ணங்கள் .14. எம்ஜி.ஆரும் ரஜினியாரும்

எனக்குள் எண்ணங்கள் 14 எம்ஜி.ஆரும் ரஜினியாரும் அப்பா எம்.ஜி.ஆர் பக்தர். எம்.ஜி,ஆருக்காக எம்.ஜி.ஆரால் எம்.ஜி.ஆரின் வாழ்வை வாழ்வதாக மட்டுமல்ல, எம்.ஜி.ஆருடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஒரு தோற்றம். உண்மையில் அது ஒரு கள்ள பக்தி என்றுதான் சொல்வேன். உடல்நலத்தைப் பேணுவது, தீய பழக்கங்களிலிருந்து தள்ளி… Read More »எனக்குள் எண்ணங்கள் .14. எம்ஜி.ஆரும் ரஜினியாரும்