சலனமின்றி மிதக்கும் இறகு

சலனமின்றி மிதக்கும் இறகு


சென்னை பாம்குரோவ் விடுதியின் கருத்தரங்கக் கூடத்தில் கடந்த ஞாயிறன்று காலை ப்ரியா பாஸ்கரனின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா நடந்தேறியது. பதிப்பாளர் வேடியப்பன் வரவேற்றார். நிகழ்வை ப்ரீத்தா மலைச்சாமி தொகுத்து அளித்தார். மூத்த இதழியலாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தலைமை வகித்தார். கவிஞர் தாமரை பாரதி நூல்களை வெளியிட்டார். ஆங்கில நூலான The Horizon Of proximity நூல் குறித்து வித்யா நந்தகுமார் மற்றும் எழுத்தாளர் தென்றல் சிவக்குமார் இருவரும் உரையாற்றினர். சலனமின்றி மிதக்கும் இறகு பற்றி கவிஞர் வேல்கண்ணனும் ஆத்மார்த்தியும் உரையாற்றினர். உதயகுமார் நன்றி நவின்றார். இனிய நிகழ்வானது.

ஆத்மார்த்தி உரையின் காணொளிச் சுட்டியை இங்கே அடைக