டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

அன்றும் இன்றும் 1 டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த்


குமுதம் 18-06-1981 இதழில் இருந்து

லைட்ஸ் ஆன்

எழுதியவர் வினோத்


உங்க படம் பார்த்தேன் ரொம்ப பிரமாதமா பண்ணி இருக்கீங்க இப்படி ஜால்ரா போட்டு சான்ஸ் கேட்கும் கூட்டம் கொஞ்ச நாளாய் எல்லா புது டைரக்டர்களின் வீடுகளிலும் காணப்படுகிறது ஹோட்டல் சவேராவில் டி ராஜேந்திரனின் அறையும் no exception.

” ஒரு தலை ராகம் சம்பந்தப்பட்ட எல்லா கான்ட்ரவர்சிகளையும் இப்போது தாண்டி விட்டேன். இப்ராஹீம் எனது மரியாதைக்குரியவர். இதோ பாருங்கள் அவர் கொடுத்த வாட்ச்சை கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று காட்டினார். ஆதாரங்கள் காட்டுவதில் ஆர்வம் உள்ளவர். ” 300 பக்க டயலாக் ஆனாலும்
ஒரே மூச்சில் எழுதி ஒப்பிக்க என்னால் முடியும். ஒரு சிறுவாக்கியம் சொல்லுங்கள் அதை வைத்து மியூசிக் போட்டு காட்டுகிறேன்” என்றார். போட்டும் காட்டினார்

இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர். குறுந்தாடி வைத்திருக்கிறார். அது ஒரு சோகமான இமேஜ் கொடுக்கிறதாம். சோகம் தான் கற்பனை வளர்க்கிறது என்றார் ஓர் ஆங்கில கவிஞனை காதலித்த பெண். தன் இளமை உருவம் மட்டுமே அவன் மனத்தில் இருக்க வேண்டும் என்று தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என்று ஒரு கதை சொன்னார் .
புது முகங்களிடம் அவருக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்று தோன்றியது. “ரஜினியை வைத்து ஒரு படம் பண்ண போகிறேன்” என்றார்.


T.Rajendar meets Superstar Rajinikanth and invites him for ...

டி.ராஜேந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

நடக்க இருந்து நடவாமற் போனவற்றின் பேரேட்டிலிருந்து மற்றுமொரு குறிப்பு இஃது.
ரஜினியை வைத்து டி.ராஜேந்தர் ஒரு படம் இசையமைத்து/இயக்கி இருந்தால்

அதன் பெயர் என்னவாக இருந்திருக்கும் ?
பாடல்கள் எத்தகையவாக மலர்ந்திருக்கும் ?
பஞ்ச் டயலாக்கின் சிகரமும் இமயமும் ஒன்றிணைந்திருந்தால்
வசனங்கள் எப்படித் தெறித்திருக்கும் ?

நிகழ்ந்தவற்றின் சரித்திரக் களஞ்சியம் மட்டும் அல்ல நிகழாமற் போனவற்றின் குன்றாத வியப்பும் சேர்ந்தது தான் சினிமா.