திரைக்கதைப் பயிற்சி

திரைக்கதைப் பயிற்சி


PATTUKKOTTAI PRABAKAR – Audio Books, Best Sellers, Author Bio | Audible.com

நேரலை வகுப்பாகத் திரை க்கதைக் கலையைப் பயிலுவதற்கான வாய்ப்புகள் அரியவை.

அன்புக்குரிய எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை குறித்த பயிற்சி வகுப்பை வருகிற (ஏப்ரல்) 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இணையவழியில் நிகர்நிஜ வகுப்புக்களாக எடுக்க இருக்கிறார். பல வருடங்களாக எழுத்துத் துறையிலும் திரைப்படத் துறையிலும் வெற்றிகரமான ஆளுமையாக விளங்கி வருபவரது அனுபவமும் வழி நடத்துதலும் ஆர்வமுள்ள புதியவர்களுக்கு நிச்சயமாகப் பலனளிக்கும். தேர்ந்த கதை சொல்லி மட்டுமல்லாது பிரபாகர் அவர்கள் திறன் மிகுந்த ஆசிரியரும் கூட. தனக்குத் தெரிந்தவற்றை எல்லோராலும் பிறருக்குப் போதித்து விட முடியாது. அந்த வகையிலும் பி.கே.பி அவர்களது இந்த இணைய வழி திரைக்கதைப் பயிற்சி வகுப்பு ஆர்வமுள்ளோருக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம். பிரபாகர் அவர்களுக்கு என் வாழ்த்துகள். இதில் சேரும் யாவர்க்கும் பேரன்பு. வெல்லட்டும் நிகழ்வு என வாழ்த்துகிறேன்.

தேடுவோர் கண்டடைக.

வாழ்தல் இனிது