ரமேஷ் ப்ரேதன் நேர்காணல்கள்


ரமேஷ் ப்ரேதன்

அன்பான யாவர்க்கும் வணக்கம்

எழுத்தாளர் ரமேஷ் ப்ரேதன் மிகுந்த உடல் நலக் குறைவோடு கடின சிகிச்சைக்காலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறார். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளுமைகளில் ஒருவரான அவரது உடலும் மனமும் நல்நிலை திரும்புவதற்கான பிரார்த்தனைகளைக் கைக்கொள்வோம். மேலும் அவருடைய நூல் ஒன்றினை யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நண்பர் ஜீவ கரிகாலன் ரமேஷ் பிரேதனின் வங்கிக் கணக்குக்கு ரூ ஆயிரம் அனுப்பி விட்டுத் தனக்குத் தகவல் அளித்தால் இந்த நூலை அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக ஜீவ கரிகாலன் உறுதி அளித்திருக்கிறார். நான் உட்படப் பலரும் இப்படி ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கிறோம். ஒவ்வொரு ஆயிரமும் எழுத்தைத் தன் சுவாசமாகவே கைக்கொண்டு வாழ்ந்து வருகின்ற ரமேஷூக்கு எதோவொரு வகையில் உதவக்கூடும். ஊர் கூடி வடம் பிடித்தால் தேர்வலம் சுலபம். இது சிறியது பெரியது என்று கருதப்படுவதற்கான செயல் அல்ல. காலத்தினாற் செய்த உபகாரம். இந்தத் தருணம் இதை மிகவும் எதிர்நோக்கி இருப்பதை உணர்வோரை இந்தப் புத்தகத்தை வாங்குங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன்.

வாழ்தல் இனிது


ஜீவ கரிகாலனின் முகநூல் பதிவு

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனிடம் பேசினேன். ஆஞ்சியோ ப்ளாஸ்ட் முடித்து வந்திருக்கிறார். மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், அதிலொன்று சிக்கலாகவும் இருப்பதால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என சொல்லியுள்ளார்கள். அவருக்கு ஏற்கனவே இருக்கும் சிக்கல்களோடு, இந்த சிகிச்சையும் மேற்கொள்வதற்கு
சிகிச்சைக்கு மட்டும் 3.5 லட்சமும், மருந்து மற்றும் இதர செலவுகளுக்காக 1 லட்சம் தேவைப்படுகிறது. அதற்காக சென்னைக்கோ அல்லது புதுவையில் வேறுரு நவீன மருத்துவமனைக்கு செல்ல மார்ச் 1ற்குள் மருத்துவனையில் அட்மிஷன் போட்டுவிடும்படி மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ஏற்கனவே அவருக்கான உதவி செய்துவரும் நண்பர்கள் தொடர்ந்து செய்யலாம், “ரமேஷ்” அவர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நூல் அவரது நேர்காணல்கள் தொகுப்பு இப்போது வெளியாகிறது.
நண்பர் ஆத்மார்த்தி கொடுத்த யோசனை இது, எல்லோராலும் பெரிய தொகை கொடுக்க இயலாது ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெரிய தொகையும் சாத்தியமாகிடும் என்று பேசியதன் விளைவாக, அவர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நூல் அதன் விலை ₹130ஐ இப்போது தற்காலிகமாக ₹1000 ரூபாயாக மாற்றிவிட்டோம். இந்த தொகையை அவருக்கே நேரடியாக செலுத்திவிட்டும் எங்களிடம் இந்த நூலின் பிரதியை வாங்கிக் கொள்ளலாம், இங்கே வந்தும் ரொக்கமாகவோ அல்லது ஜீ.பே 9940021472 என்கிற எண்ணிற்கோ தரலாம்.
ஒவ்வொரு பத்து நூல்களுக்கான தொகை வந்ததும் அவருக்கே அனுப்பிடத் திட்டமிடுகிறோம்.. ₹1000ற்கு மேல் செலுத்த முடிபவர்களும் அவருக்கே நேரடியாகச் செலுத்தலாம்.
வாருங்கள் ஒரு மொழியின் ஆளுமைக்கு மொழியின் பெயராலே உதவுவோம்…
ரமேஷ் பிரேதனின் வங்கிக் கணக்கு எண் :
RAMESH
STATE BANK OF INDIA
A/C 32821202848
MUTHIYAL PET BR
PONDICHERRY
IFSC. SBIN0015420
91 86086 10563
இப்படி என் மனதில் யோசனை உதித்ததும், உடனேயே அதை வரவேற்ற நண்பர்கள், உடனடியாக அதை செயல்படுத்த உதவினார்கள்.

May be an image of 4 people, people standing and book
தோழர் பாலைவன லாந்தர் தோழர் அபுல் கலாம் அசாத் கவிதைக்காரன் இளங்கோ ஆகியோர் முதல் மூன்று பிரதிகளை வாங்கினார்கள்.
நண்பர்களும் எம்மோடு இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.