வடக்கே போகும் ரயில்

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ரயில் (பூர்வ ஜென்ம வடக்கன்)
படத்தின் முதல் பாடல் பூ பூக்குது வெளியாகி உள்ளது.

பாட்டு எழுதி இருப்பவர் ரமேஷ் வைத்யா.
இசையமைத்து பாடியிருப்பவர் எஸ்.ஜே.ஜனனி.
யாருக்குமே வாய்க்காத ஒரு குரல் ஜனனியுடையது.

அச்சு அசலான தமிழை சொற்களின் ஊடே யூகித்து விட முடியாத ஒரு பைத்தியக்கார சோகத்தை அதோடு கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் சொல்லொணா சந்தோஷத்தை இன்னும் வார்த்தைக்கு வசப்படாத உணர்வுக்கு குவியலை ஒரு பாட்டில் பொதிந்து கேட்கத் தருவது சமீபத்தில் நடக்காத ஒன்று. ஜனனியின் குரல் மந்திரிக்கிறது.
முதல் முறை கேட்கும் பொழுது உடனே மறுமுறை கேட்க வைக்கக்கூடிய பாடல்கள் தமிழில் அருகி விட்டன.
இந்தப் பாடல் அந்த வகையைச் சேர்ந்தது. கேட்டுக் கொண்டே இருக்கப் போகும் ஒரு பாடலாக மனசைப் படுத்தி வைக்கிறது.

இம்புட்டு சந்தோசம்
எங்கிட்டு நான் வைக்க

இந்த இரண்டு வரிகளை மனசுக்குள் டாட்டூஸ் பண்ணிக் கொள்ளலாம். தகும்.

வட திசை தாண்டி எட்டுத்திக்கும் வெற்றி பெற தயாரிப்பாளர் அன்பு நண்பர் வேடியப்பன் இயக்குநர் பாஸ்கர் சக்தி நடிகரும் கவிஞருமான ரமேஷ் வைத்யா இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஜனனி உள்ளிட்ட ரயில் படக்குழுவினர் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன்

வாழ்தல் இனிது