வைகை இலக்கியத் திருவிழா

தமிழக அரசு முன்னெடுக்கும் இலக்கிய விழாக்கள் மாவட்டந்தோறும் நடந்தேறி வருகின்றன. அந்த வரிசையில் நாளை 26-03-2023 மற்றும் திங்கட்கிழமை 27-03-2023 இரண்டு தினங்கள் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தினுள் வைகை இலக்கியத் திருவிழா நடக்கவிருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல் 5.00 மணி வரை நானும் எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனும் சமகாலச் சிறுகதைகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றினை நிகழ்த்த இருக்கிறோம். இரண்டு தினங்களும் பல்வேறு நிகழ்வுகளால் இந்தத் திருவிழா நிறைந்து நிகழவுள்ளது. இலக்கிய விரும்பிகள் மதுரைவாழ் அன்பர்கள் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டோர் யாவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

வாழ்தல் இனிது