கவுண்டமணி

எத்தனையோ படங்கள் திரைக்கதை இன்னபிற சொதப்பி எடுத்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு பார்த்ததற்குப் பாடல்களும் பின்னணி இசையும் காரணங்களாக இருந்திருக்கின்றன. கூடவே அப்படியான படங்கள் பலவற்றைப் பார்த்ததற்கு முக்கியக் காரணம் என்று இன்னொருவரைச் சொல்ல முடியும். அவர் தான் மகான் கவுண்டமணி. தீபாவளி அன்று ரிலீஸ் ஆன திருமதி பழனிச்சாமி படம் ஒரு உதாரணம். அந்தப் படத்தைப் பார்த்த பலரும்  கொண்ட கோபத்தின் விளைவாக வில்லனை சப்போர்ட் செய்து படம் பார்த்ததெல்லாம் நடந்தது. இன்றளவும் அதன் பாடல்களும் மகான் சம்மந்தப் பட்ட காமெடி காட்சிகளும் தான் இனிய நினைவாக எஞ்சுகின்றன.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கவுண்டமணி மகான்…!

வாழ்க பல்லாண்டு. வாழ்தல் இனிது.