பாப்கார்ன் படங்கள்
5 அன்பே வாவ்

 


இன்றைக்கு வேறு விதமான சவால் மற்றும் காதல் நிறைந்த காட்சியைப் பார்க்கலாம்.

ஜேபி பெரும்பணக்காரர். எந்த அளவுக்குப் பணம் என்றால் ஸ்ட்ரெஸ் மிகுந்து போய் கொஞ்ச நாளைக்கு நீங்க லீவு எடுத்துக்கலைன்னா மர்கயா ஆய்டுவீங்க என்று அவருடைய ஃபேமிளீ டாக்டர் உரிமையோடு எச்சரித்து லீவுகளை ப்ரிஸ்க்ரைப் செய்து அனுப்பி வைக்கும் அளவுக்குப் பணம் ப்ளஸ் ஸ்ட்ரெஸ் ப்ளஸ் விடுமுறை கொண்டவர். கிளம்பி நேரே தன் சொந்த பங்களாவில் தங்கலாம் என்று கிளம்பி சிம்லாவுக்குச் செல்கிறார். அங்கே கிருஷ்ணய்யா தி ஸ்டாஃப் மெம்பர் ஆஃப் மிஸ்டர் ஜேபி தன் மனைவியோடு காசியாத்திரைக்கு கிளம்பிச் சென்றுவிட அவர் மகள் கண்ணம்மாவும் மைத்துனன் ராமைய்யாவும் மட்டும் பங்களாவில் இருக்கின்றனர். பேராசை பிடித்த ராமைய்யா அந்த பங்களாவை வெகேஷனுக்கு வரும் டூரிஸ்டுகளுக்கு வாடகைக்கு விட்டுக் காசு பார்க்கிறார். அப்படி வந்து தங்கும் கீதாவோடு தன் பங்களாவில் தானே காசுகள் தந்து பணங்கள் தந்து தங்கக் கூடிய ஜேபி என்று தன்னை அறிவித்துக் கொள்ளாத பாலசுப்ரமணியம் அலையஸ் பாலுவுக்கு மோதல்களும் பிற்பாடு காதல்களும் வருகின்றன. சொல்லிக் கொள்ளாத பல பிற்காலக் காதற் படங்களுக்கெல்லாம் முன்னோடிப் படம் அன்பேவா தான் என்பது நம்மில் தம்மில் எத்ற பேர் அறியாம்?

No description available.

இதற்கு நடுவே தான் ஒரு சவால் காட்சி. பட்டணத்தில் பூதம் அசோகனையே இன்னும் காற்றடித்துப் பெரிதாக்கினாற் போலொரு வஸ்தாது அதே போன்ற தொங்கு மீசை ப்ளஸ் பயங்கரமாய் பில்டப் செய்த உடல்வாகுடன் வாட்69 புட்டியை நீட்டிக் கொண்டே அறிமுகமாவார். அவர் முதலில் 500 பவுண்டு எடையைத் தன் இரண்டு கைகளால் தூக்குவார். அதைக் கீழே எறிந்து விட்டு இரும்புக் கம்பியைத் தன் இரண்டு கரங்களால் வளைப்பார். அதைக் கேலி செய்யும் ராமைய்யா கழுத்தில் வளைந்த கம்பியை மாட்டி அவரைத் தரதரவென இழுப்பார். இதனைத் தட்டிக் கேட்க நினைக்கும் கீதாவை அறைய முற்படும் போது அங்கே வந்து சேர்வார் ஜேபி அலையஸ் பாலசுப்ரமணியம். அந்த வஸ்தாதுவை நாலு அடி அடித்ததோடு நிற்காமல் ஐநூறு பவுண்டு எடையைத் தூக்கி கம்பியை வளைத்த அவரைத் தன் தோளின் மீது அலேக்காகத் தூக்கி பெரிதாய் ஒரு சுற்றுச் சுற்றித் தரையில் எறிவார்.

No description available.

இப்போது வஸ்தாது தன் தாது சக்தி குன்றி வெறும் வஸ்து போலாகி இருப்பார். அவரைப் பார்த்து மௌனமாகத் தன் விரலைக் காட்டி எச்சரித்து விட்டு அவர் மனம் திருந்தியதை அறிந்ததும் அன்பே வா என்றுணர்த்தும் வண்ணம் அவரைத் தன் பக்கம் வரவழைத்து னோடு அணைத்துக் கொண்டு படத்தின் டைடிலுக்கு நேர்மை செய்திருப்பார் ஜேபி அலையஸ் பாலு அலையஸ் எம்ஜி.ஆர்

No description available.

 

அடுத்த சீன் தான் காதல் தோல்வி சீன்.

வேக வேகமாய் வஸ்தாது காட்சியிலிருந்து வெளியேறி வேறேதோ பூங்காவுக்குச் சென்று புல் தரையில் உலாவிக் கொண்டிருப்பார் கீதா அலையஸ் கதாநாயகி. அங்கே செல்வார் ஜேபி என்று தன்னை அறிவிக்காத ஜேபி. அவரைப் பார்த்ததும் கண்ணீர் மல்க ஒருமுறை அல்ல இருமுறை அல்ல நாலு முறை பாலூ-பாலூ-பாலூ-பாலூ என்று அழுவார் கீதா அலையஸ் கதாநாயகி. அடுப்பில் கொதிக்க வைத்த பாலை அணைக்க மறந்து விட்டுக் கடைத் தெருவுக்குப் புறப்பட்டு வந்து விட்டு நெடு நேரம் கழித்து ஞாபகத்துக்கு வந்த போது என் நண்பன் வண்ணமுத்து ஒரு தடவை அய்யோ பாலூ அய்யோ பாலூ என்று இப்படித் தான் கலங்கினான். எனக்கு அவனுடைய வாழ்க்கைக் கதை வேறு நினைவுக்கு வந்தது. ஆனால் படத்தில் கீதாவின் அழுகைக்குக் காரணம் அதுவல்ல. முன்னரே நீ என்னை நிஜமாகவே லவ் பண்ணுவதை என்னிடம் சொல்லியிருக்கலாமே பாலு. நான் என் அப்பாவிடம் போய் அவர் விருப்பப் படியே என் அத்தை மகனை கலியாணம் செய்துகொள்வதாக வாக்குக் கொடுத்துவிட்டேனே அய்யோ இப்போது என் செய்வேன் என்று கதறுவார்.

அந்த அப்பாவாகப் பட்ட மிஸ்டர் புண்ணியகோடி கதாபாத்திரர் இருக்கிறாரே அவர் அந்தப் படத்தில் நம்பர் ஒன் காமெடி பீசு என்று அறியப்பட்டவர். அவரை நினைத்து அவர் மகள் சின்னப்பாப்பா அலையஸ் கீதா அலையஸ் கதா நாயகி அழுகிறார் என்று மட்டும் தெரிந்தால் போதும், அவர் அதை விட அதிகமாக அழுது தன்னைத் தானே தண்டித்துக் கண்டிப்பார். அந்த அளவுக்கு சாந்த சுபாவி. அவரை நினைத்து நீ ஏன் அழுகிறாய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றல்லவா ஜேபி அலையஸ் பாலு அலையஸ் எம்ஜி.ஆர் சொல்லி இருக்க வேண்டும்..?

அது தான் இல்லை.

அந்த இடத்தில் தான் அன்பே வா படம் உலகளவிலான காதல் காவியமாக மாறும் காட்சி ஒன்று வரும்.

கீதா தன் நிலையைச் சொல்லி அழுவதைப் பார்த்ததும் பாலு அலையஸ் ஜேபி என்று தன்னை அறிவித்துக் கொள்ளாத நாயகர் தானும் அழுவார். அதுவும் எப்படித் தெரியுமா..? இதுவரை மற்றவர்கள் தான் மற்றவர்களின் சட்டையைப் பிடித்துக் கசக்கி நியாயம் கேட்பார்கள். அவர் தன் சட்டையைத் தானே பற்றி முறுக்கிக் கொண்டு அதையே ஒரு சுயபலமாக்கிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு கண் கசிந்து கீதா கீதா கீதா என்பார். சாவியைப் பறித்துக் கொண்டு தர மறுக்கும் கல்நெஞ்சனிடம் கதறிக் கெஞ்சி சாவியைக் கேட்டழும் குழந்தையைப் போல் கீதா கீதா என்பார். சட்டென்று தன் பிடியிலிருந்து தன்னையே விடுவித்துக் கொண்டு யாராலும் முடியாத அபூர்வமான புன்னகையோடு அழாதேம்மா. அழ வேண்டியது நான் என்று ஷிஃப்ட் மாற்றித் தருகிற சகபணியாளனைப் போல் பரிவு காட்டுவார்.


No description available.

அதன் பிறகு “எனக்கு நடக்கக் கூடாதது நடந்திருச்சி. உனக்கு இனி நடக்க வேண்டியது நல்லதா நடக்கட்டும்” என்று தான் ஜகாவாகி கீதாவை சியர் அப் செய்தவண்ணம்

1.அவள் கையைப் பற்றிக் கொண்டு 

No description available.

2 கையை எடுத்து விட்டு நேருக்கு நேராய்ப் பார்த்து

No description available.

3 கை பற்றாமல்

No description available.

என ஃபேட் அவுட்டில் நடைபோட்டு காதலிலிருந்து பிரிவுவழியாக காதல் தோல்வியை நோக்கிச் செல்வார் ஜேபி அலையஸ் பாலு அலையஸ் எம்ஜி.ஆர் அலையஸ்
தி காதல் தோல்வி ஹீரோ

பட் காதலின் கணக்கு வேறாகத் தான் இருந்தது

ஊரிலிருந்து கீதாவைக் கலியாணம் செய்துகொள்வதற்காகப் புறப்பட்டு வரும் பைலட் அலையஸ் அத்தை மகன் அலையஸ் சேகர் என்பவருக்குத் தான் கல்யாணத் தோல்வியாகி விடும்.
இதில் எதிர்பாராத திருப்பம் என்னவென்றால் உலகத்தின் எந்த சினிமாவிலும் இடம்பெறாத அந்தக் காட்சி தான் அது

தட் இஸ் ஜேபியின் க்ளாஸ் மேட் அலையஸ் க்ளோஸ் ஃப்ரெண்ட் அலையஸ் உயிர் நண்பன் தான் வந்து சேர்ந்திருக்கும் அத்தைமகன் சேகர் ஏற்கனவே பாலுவும் கீதாவும் லவ்விக் கொண்டிருந்ததைத் தன் மதியூகத்தால் அறிந்து தன் ஒருதலைக் காதலைத் தானே தனக்குள் ஒரு க்ளாஸ் ஒயினோடு கலந்து ஊற்றி மூடிக் கொள்வார்.


No description available.

அத்தோடு முடியும் குழப்பம்.

அதற்கு நடுவே க்ளைமாக்ஸில் கீதாவைத் துரத்தித் துரத்திக் கன்வின்ஸ் செய்யும் ஜேபியை முன்னர் ஜேபி அடித்து விட்டு அணைத்துக் கொண்ட அதே வஸ்தாது மீண்டும் ஒரு முறை தாக்க முற்பட்டு மீண்டும் ஒருமுறை ஜேபி அவரைத் திரும்பத் தாக்க முற்படும் போது “லாஸ்ட் ஃபைட் ஸாரி” என்று சொல்லி விட்டு உலகளாவிய குழப்பவில்லனாகவே தென்பட்டு மறைவார் தட் வஸ்தாது.

பாலு அலையஸ் ஜேபி அலையஸ் காதல் வெற்றி நாயகனுக்கும் கீதாவுக்கும் பல கட்டப் புரிதல் குறைபாடுகளுக்கு அப்பால் கலியாணம் நடக்கும்.

அன்பே வாவ் படத்தின் “காதல் காட்சிஸ்” இன்றைக்குப் பார்த்தாலும் “மெய்ஸ்” சிலிர்க்க வைக்கும்.