சாலச்சுகம் 10

 

                                                                      மழைவசம் தோற்றல்                                  

மூங்கில்கள் உரசுகையில்  
எழுகிற சீழ்க்கையொலி போலக்  
கொட்டுகிற மழையில்  
ஒருமுறை  
உன்பெயரைக் கொஞ்சம்  
சப்தமாக உச்சரிக்கிறேன்  
தாரைகளெல்லாம்  
அதே பெயராகித் தொடர்கிறது  
லஜ்ஜையற்ற பின்மழை   
முடிந்தாலிந்த மழையைக்  
கொலைசெய்து விடலாமா  
என ஒருகணம் ஏங்குகிறேன்  
கிட்டாத பொம்மைக்கழுது  
பின் அன்னையிடமே  
மடிபுகுந்து அயர்கிறது  
சிசுமனசு  
மழைவசம் தோற்றல்  
சாலச்சுகம்