Skip to content

கவிதை

“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

1. அந்த ஊரைச் சேர்ந்த யாராவது எங்களூருக்கு வந்ததுண்டா எனக் கேட்கையில் எல்லாம் ம் என்ற ஒற்றெழுத்து ஒருபதில் மாத்திரமே சொல்வது வழக்கம். உறங்கவும் விடாத விழிக்கவும் ஏலாத தீராக்கடன் நினைவின் மனப்பாழ் போலச் சொல்லியிராத ஒரு கதை 2. பிறழ்… Read More »“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

    சதுரங்கநாய் _________________ பேச்சுவாக்கில் “சதுரங்கநாய்” என்றேன். “அதென்னது?” முகம் சுளிக்கிறீர்கள். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் சதுரங்கப் பலகையைச் சுற்றிச் சுற்றி யாராவது தன்னையும் அந்தக் கட்டங்களினூடே அனுமதிக்க மாட்டார்களா?வென காலங்காலமாய் வந்து வந்து அல்லாடுகிற ஆட்டமறியா நாய்ஜென்மத்தை நீங்கள்… Read More »

21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

சமீபத்து ப்ரியக்காரி 21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல் 1 ஸ்டெல்லா என்பது யார் யார் கேட்டாலும் எந்த பதிலும் சொல்வதில்லை என்பது நெடுங்காலப் புகார் 2 ஒரு ஸ்டெல்லா ஒரு போதும் ஸ்டெல்லா என்பது யார் எனக் கேட்க மாட்டாள் என்பதொரு… Read More »21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

20.பண்டிகை தினத்துப் புன்னகை

சமீபத்துப் ப்ரியக்காரி 20 பண்டிகை தினத்துப் புன்னகை கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும் அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?… Read More »20.பண்டிகை தினத்துப் புன்னகை

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன்… Read More »தேடிச்சிறத்தல்

வீடென்ப

வீடென்பது என்ன? ஓரு வீடு, ஒரு விலாசம், ஒரு அறை, அனேகமாக உட்புறம் மூடியே இருக்கும் ஒரு சாளரம் படுக்கையறையில் ஒரு பங்கு, உடைகளின் அலமாரி சமையலறைப் பாத்திரங்களில் ஒரு சில, சாப்பிடும் தட்டொன்று. மீன் தொட்டி, வாசலில் தொங்கியபடி வளர்ந்து… Read More »வீடென்ப

மூன்று கவிதைகள் ஆத்மார்த்தி 1 வாங்கும் பொழுதில் ஒரே நிறத்தில் இருந்தது நாள்பட மெல்ல நிறம் வெளுத்துத் தொட்டிக் குழாமில் தனித்துத் தெரிகிற அந்த மீனுக்குச் சூட்டி ஆறேழுமுறை அழைத்தும் விட்டேன் யார்க்கும் சொல்லாத உன் பெயரை 2 நெடு நேரமாய்க்… Read More »

27 காதல் கவிதைகள்

இவை புதிய தலைமுறை இதழில் வெளியானவை. இதை வாசித்துக் காதலில் ஆழ்ந்து இன்புறுங்கள். காதலின் துன்பமே இவ்வுலகின் ஆகச்சிறந்த இன்பம். இசையும் காதலும் நிஜமற்ற பொய்கள். வாழ்க காதல். வாழ்தல் இனிது 1 ஒரு காதல் கடிதத்தை  எப்படித் தொடங்குவது என்பது… Read More »27 காதல் கவிதைகள்

சாலச்சுகம் 19

அன்பை அளவிடுதல் என்னிடமிருப்பது தாங்க முடியாத பேரன்பு. எப்படியானதென்றால் “விற்கப் பண்டங்களைச் சுமந்துகொண்டு வீதிவழியே வருபவள் வெயில் பொழிவின் நடுவே கிடைக்கும் சின்னஞ்சிறு நிழலடியில் தலைச்சுமையை இறக்கித் தரையில் கிடத்தி விட்டுச் சற்றே கண்ணயர முனைகிறாள். நொடிப்பொழுதில் அரிதினும் அரியவொன்றைக் களவுகொடுக்கிறாற்… Read More »சாலச்சுகம் 19

டச்-வுட் 2

ஸ்வர்ணக்குவியலைப் பெற்றுக் கொண்டு வெல்லமிட்ட அவலைப் பரிசளித்தவனின் காதுகள் இன்று நீ உபசரிக்கவிருக்கும் திரவத்துக்கு ஈடாய் என்னால் என்ன தரமுடியும் நண்பா என் காதிரண்டும் உன் காலடி அடிமைகள். சொல்ல முயற்சித்து முழுமையாகாமற் போகவிருக்கும் உந்தன் கதைச்சோகம் முழுமையையும் கேட்டுத் திளைக்கட்டும்… Read More »டச்-வுட் 2