சாலச்சுகம் 14

நீ
வந்துவிட்டாற்
போலொரு பிரமை
அதை நம்ப வேணுமாய்
ஆவலாதி
அது தான் நிஜம்
என்றொரு ஆழ ஏக்கம்
கூடுமட்டும் சமீபித்துவிடும்
என்றொரு நம்பிக்கை
எப்படியாவது நிகழ்ந்தால்
போதுமானதென்பது
பிரார்த்தனை
தேவை
பிரார்த்திக்கவொரு
தெய்வம்
சாலச்சுகம்