சாலச்சுகம் 4

தெ வி ட் டா த  தெ ள்

எனக்கு
வேண்டியதெல்லாம்
தலைமறைவுக்கென
யாருமறியாத ஓரிடம்
மனித நுழைதல்
நடைபெற்றிராத
ஆழ்வனம்
ஆங்கோர் கனமரம்
கிளைகளூடாக ஓர் குடில்
உள்ளொரு படுக்கை
அதில் 
முடங்குகையில் மேலே
போர்த்தவொரு கம்பளி
போலவொரு மனசு
சாலச்சுகம்