சாலச்சுகம் 5

                                               மூன்று மலர்


1

இதுவரை பூவாதவொன்றை
அவளுக்குத் தரவேண்டுமெனத்
தேடியோடிச் சலித்த நாளில்
மின்சாரம் அற்றுப் போய்
பக்கவாட்டுச்சுவரில்
குவிந்த கரங்களில்
மலர்ந்திருந்தது
நிழல்மலர்.
இதனைத் தந்தால் ஆயிற்று

2

அன்பின் முழுமலர்
பூக்கும் வரைக்கும்
பூக்கவே பூக்கும்
காத்திருப்பின்
நீள்மலர்.

3

செடிமலர் பறித்துக்
கரத்திலளிப்பதைவிடவும்
பூவுக்குரியவளை
அழைத்துவந்து
பூவிடம் சேர்ப்பித்தல்
சூட்சுமம்.
சாலச்சுகம்