சாலச்சுகம் 6

                                      இ ன் னொ ரு   ம ழை                                                      


பிணத்தின் முன் உதிரும் சொற்களெனத்
தூறுகிறது வானம்.
அடக்கி வாசிக்கும் தப்பட்டைக்காரனாய்ப்
பின் தங்குகிறது வெயில்.
ஒதுங்கக் கிடைத்த இடத்தில்
நின்றவாறே உடல்குலுக்குகிறது
அடர்சிவப்பு நாய்
பாதசாரிகளின் மேல்
சிதறுவதற்காகச் சேகரமாகியிருக்கிற
நீர்ப்பரப்பு காத்திருக்கிறது
சக்கரத் தீண்டலுக்கென
ஒரு தேநீர் குடித்தால் தேவலாம்
என்னும் வாக்கியத்தோடு
முடிந்துகொண்டிருக்கிறது
இன்னொரு மழை
சாலச்சுகம்