டச்-வுட் 2

ஸ்வர்ணக்குவியலைப் பெற்றுக் கொண்டு
வெல்லமிட்ட அவலைப் பரிசளித்தவனின் காதுகள்

இன்று
நீ
உபசரிக்கவிருக்கும்
திரவத்துக்கு
ஈடாய்
என்னால்
என்ன தரமுடியும்
நண்பா
என் காதிரண்டும்
உன்
காலடி அடிமைகள்.
சொல்ல முயற்சித்து
முழுமையாகாமற் போகவிருக்கும்
உந்தன்
கதைச்சோகம்
முழுமையையும்
கேட்டுத் திளைக்கட்டும்
அவை.