இன்றைய கவிதை
நீர் வாசம்


No photo description available.

எனக்கு ஒரு கணக்கு இருந்தது
இன்று பூக்கும் எல்லா மொக்குகளையும்
நேற்றே பறித்துவிட்டுக் கரையேறினேன்.
குளத்திற்கு ஒரு கணக்கு இருந்தது
நேற்று பறிக்கக் கொடுத்த மொக்குகள் போக
இன்று மலர அது தன் வசம் வைத்திருந்தது சில மாயப் பூக்களை.
வெயிலுக்கு மிகவும் பிடிக்கிறது நீர் வாசம் ததும்பும் அவற்றை

கல்யாண்ஜி
உருப்பளிங்கு
சந்தியா பதிப்பக வெளியீடு
முதல் பதிப்பு 2019
விலை ரூபாய் 110

அதிகம் கண்டுகொண்டே இருக்கிற,வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழத் தக்க இயல்பான பிம்பங்களிலிருந்து காலகாலத்துக்கும் அதிசயிக்க வேண்டிய அற்புதங்களை கண்டெடுக்கிற தேர்ச்சிப் பணியை விருப்பத்தோடு பன்னெடுங்காலமாக செய்து வருகிறார் கல்யாண்ஜி. “ஏற்கனவே நன்றாக தெரியும்” என்பதான விஷயந்தாங்கிகளை முதல்முறை-அழுத்தம் திருத்தமாக-அவரவர்க்கு அறிமுகம் செய்து வைக்கும் கவிதைகள் இவை. சமுத்திரத்தின் மடியில் கொட்டிக் கிடக்கிற சிப்பிகளை சங்குகளை கரை மணலை யார் தமதென்று எடுத்துப் போக வேண்டும் என்று அலைகளுக்கு தெரியாதா என்ன?
50 ஆண்டு காலமாகத் தமிழ்க் கவிதை உலகில் நுண்மையான முன்மொழிதல்களைத் தன் கவிதைகளின் ஊடாக நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கல்யாண்ஜி.
உருப்பளிங்கு அப்படியான மற்றுமொரு நுட்பம்.