கவிதையின் முகங்கள்

வாழ்வாங்கு

இன்றைய கவிதை     வாழ்வாங்கு கதாபாத்திரங்கள் இரண்டும் தமக்குள் காப்பாற்றிக் கொண்டு உலவும் ரகசியங்கள் அவர்தம் கதை எழுதும் எனக்கே தெரிவதில்லை வாழ்வே   பாதசாரி அகநதி கவிதைத் தொகுதி தமிழினி பதிப்பகம் விலை ரூ 80 பாதசாரி எழுதுபவை… Read More »வாழ்வாங்கு

நீர் வாசம்

இன்றைய கவிதை நீர் வாசம் எனக்கு ஒரு கணக்கு இருந்தது இன்று பூக்கும் எல்லா மொக்குகளையும் நேற்றே பறித்துவிட்டுக் கரையேறினேன். குளத்திற்கு ஒரு கணக்கு இருந்தது நேற்று பறிக்கக் கொடுத்த மொக்குகள் போக இன்று மலர அது தன் வசம் வைத்திருந்தது… Read More »நீர் வாசம்

அணியில் திகழ்வது

இன்றைய கவிதை சுகுமாரன் சமீபத்திய கவிதைத் தொகுப்பு “இன்னொரு முறை சந்திக்க வரும்போது” காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது இதன் விலை ரூ 90 சுகுமாரன் தனக்கென்று பிரத்தியேக மொழிப் பரவல் கொண்டவர் ஒரு எளிய தன் புலம்பலை அளவில் மிகப்பெரிய ஸ்திரமாக… Read More »அணியில் திகழ்வது

எந்த இறகால்

இன்றைய கவிதை   எனக்குத் தெரியும் பழங்கள் எப்போது அழுகத் தொடங்குமென்று அன்பு எப்போது மூச்சுமுட்டுமென்று உண்மை எந்த இறகால் கனக்குமென்று   ஷங்கர்ராமசுப்ரமணியன் கல் முதலை ஆமைகள் க்ரியா வெளியீடு விலை ரூ 180 ஷங்கர் ராமசுப்ரமணியனின் மேற்காணும் கவிதை… Read More »எந்த இறகால்

உடைந்த வாழ்வு

இ ன் றை ய க வி தை கண்டராதித்தன் எழுதிய கவிதைத் தொகுப்பு “பாடி கூடாரம்”. சால்ட் பதிப்பக வெளியீடு 101 பக்கங்கள் விலை ரூ 130 உடைந்த வாழ்வு மத்தியானத்தில் நீர் தளும்பாதிருக்கிற குளத்தின் எதிரில் நின்றுகொண்டிருப்பவனுக்கு குடத்தில்… Read More »உடைந்த வாழ்வு

அதியன் ஆதிரையின் கவிதைகள்

இன்றைய கவிதைகள் அதியன் ஆதிரையின் கவிதைத் தொகுதி “அப்பனின் கைகளால் அடிப்பவன்” நீலம் வெளியீடாக வந்திருக்கிறது. இதன் விலை ரூ 150. அறிவுமதியும் ஆதவன் தீட்சண்யாவும் எழுதியிருக்கும் உரைகள் தொகுப்புக்கு வலு சேர்ப்பவை. அவற்றைக் காட்டிலும் எனக்கு அதியன் ஆதிரை எழுதியிருக்கும்… Read More »அதியன் ஆதிரையின் கவிதைகள்

பொருத்தப்பாடு

இன்றைய கவிதை பொருத்தப்பாடு உண்மையில் அவ்வளவு தைரியம் யாருக்கு உள்ளது என்றுதான் நிமிர்ந்து நோக்கினேன் ஆனால் பாரேன் வேடிக்கையை இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து காலம் தாண்டியும் தேடிவந்து கனகச்சிதமாக என் கழுத்தை மட்டும் குறிவைத்து இரக்கமின்றி உரசிச் செல்லும் ஒரு… Read More »பொருத்தப்பாடு

இரவை நெய்தல்

இன்றைய கவிதை இரண்டு கவிதைகளை இன்றைக்கு பகிரலாம் என நினைக்கிறேன் “சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்” என்ற தலைப்பில் பூமா ஈஸ்வரமூர்த்தியின் சமீபத்திய கவிதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது 104 பக்கங்கள் கொண்ட இதன் விலை 100 ரூபாய். பூமா… Read More »இரவை நெய்தல்

துரோஜன் குதிரை

இன்றைய கவிதை தமிழினி வெளியீடாக ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள் முழுத்தொகுப்பாக வந்திருக்கிறது. பக்கங்கள் 440. விலை ரூ 450 மோகனரங்கனின் கிறங்கச்செய்யும் புனைவு மொழி சாதாரணங்களிலிருந்து அகற்றித் தரும் அசாதாரண-அபூர்வங்களின் காட்சித் திரள்கள். நோக்கத் தக்கவற்றை ஒவ்வொரு இழையாக எடுத்தெடுத்து வானில்… Read More »துரோஜன் குதிரை

ஸ்ரீ நேசனின் கவிதை

ஸ்ரீ நேசனின் கவிதை ஸ்ரீ நேசனின் புதிய கவிதைத் தொகுதி வெளிவந்து இருக்கிறது. தொகுப்பின் தலைப்பு “மூன்று பாட்டிகள்” . தமிழ் மொழியில் இயங்குகிற மிகத் தீவிரமான கவிமனங்களில் ஒன்று நேசனுடையது. வெற்றி தோல்விகள் ஏதுமற்ற மெனக்கெடல்கள் எதுவுமில்லாத தன் போக்கில்… Read More »ஸ்ரீ நேசனின் கவிதை