சமீபத்து ப்ரியக்காரி
  3 பொய்யறுதல்


சாந்தமொன்றை எண்ணுக
யேங்கியேங்கித் திருக்கலைக
காத்துக் கடும்பொழுது கோலம் தீர்க
அதற்குமொரு பெரும்போழ்து அப்பால்
வந்து தலைகோதிக் கன்னம் பற்றிக்
காதல் சொரியும்
பூநிகர்ப் பொய்வேலை புறந்தள்ளுக
பேரென்பென்று ஏதுமில்லை காண்
சட்டென்று
கண்ணுற்ற மறுகணம்
விழுங்கிக் காணாது போமொரு
யட்சிக்கு உணவாதல் வரம்
சாலச்சுகம்