மூலிகை நாட்டம்

1 ஏற்கனவே ஒருமுறை கூட வந்திராத ஊர்

அந்த ஊரில் சென்று இறங்கினேன்
நுழைவதற்கான வழியினூடாகப்
பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியேறினேன்
இடதுபுறம் திரும்பி நடந்து சென்று
அந்தப் பெட்டிக்கடை முன் நின்றேன்
சிறிய தூரத்தில் வந்து நின்றவனுக்கு
என்னை விட இரண்டொரு வயது கூடுதலாயிருக்கும்
எங்கள் கண்கள் நேராய் நோக்கின
அடுத்த கணம் என் வலது கரத்துக் கட்டைவிரல் நுனியை
ஆட்காட்டி விரலால் சுரண்டினேன்
எங்கோ பார்த்தபடி அவனும் அவ்வண்னமே செய்தான்
தற்போது அவன் முன்னால் செல்லப்
பின் தொடர்கிறேன் நான்
புதிய என்றேதுமில்லை
எல்லாமே ஏற்கனவே இருப்பதுவே

 

2. எக்ஸ்டஸி

அரவம் இரை தேடுகிறாற் போல்
இயலாதெனினும்
கூடுமட்டும் இனிப்பைத் தேடு
மரீஜ்வானாவின் தலையில்
நீ அணிவிக்கும் க்ரீடமாகவே
அந்த ஒரு துண்டு இனிப்பு
விளங்கப் போகிறது.
3.ஏன்

ஏன்
என்ற
கேள்வி
இங்
புகையாய்
வளையம்
வளையமாய்
இழுக்க இழுக்க
எல்லாப்
பிரச்சினைகளும்
தீருது
பாரேன்
4.இருவேறு


 

கஞ்சா
தான் நடிக்கும்
எல்லாத்
திரைப்படங்களிலும்
சாத்வீகமென்றும்
வன்முறையென்றும்
இருவேடங்களில்
நடிக்கிறது

5 நாஸ்டால்ஜியா

நோட்டுப்புஸ்தகங்களுக்கு
அட்டை போடும்
அதே ப்ரவுன் பேப்பரில் தான்
பொட்டலம்
போடப்படுகிறதா
இப்பவும்

6 பரவசம்


உங்களுக்கு
எந்தப்
பொய்யை
உண்மையாக்க
வேண்டும்
7 எத்தனையோ

எத்தனையோ
வழிகள்
அதிலிதுவொன்று