ராசி அழகப்பன்

ராசி அழகப்பன்


No photo description available.முதன்முதலாக பரிதி மூலமாய்த் தான் ராசி அழகப்பன் எனக்குப் பரிச்சயம். அவருடைய கவிதைகளை தொகுத்து ஒரே தொகுப்பாக மாற்ற வேண்டும் என்று கோரினார். அந்தக் கவிதைத் தொகுதியைத் தயார் செய்த சமயத்தில் அதைக் குறித்துப் பேச ஆரம்பித்தது. நாம் பழகுகிற எல்லோரிடத்திலும் உள்ளார்ந்த நட்பை, அன்பை உணர்வோம் என்று உத்தரவாதம் இல்லை. ராசி அழகப்பன் அப்படியான உள்ளார்ந்த அன்புக்கும் நட்புக்கும் உரித்தானவர். அவரோடு எப்போது உரையாடினாலும் விட்ட இடத்திலிருந்து நம்மால் பேச முடியும். எத்தனை முறை சந்தித்தாலும் அலுக்காத மனிதர் ராசி. சராசரி மனிதனைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான நகைச்சுவை உணர்வைத் தன் பேச்சினின்றும் உதிர்ப்பவர். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் என்பது க்ளிஷே. தூரத்திலேயே பாடல் கேட்கும் தானே? அப்படித் தான் புன்னகையும் மென்மனமும் கொண்டவர் ராசி அழகப்பன். எழுத்தின் மீது குறையாத ப்ரியம் கொண்டவர். கவிதைகளின் மீது பெரும்பற்றுக் கொண்ட கவிமனம் அவருடையது. வண்ணத்துப்பூச்சி என்ற அற்புதமான படத்தை இயக்கியவர், தன் அடுத்த திரை முயல்வுகளை நோக்கி நடைபோடும் இனிய நண்பர் ராசி அழகப்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பன்னெடுங்காலம் வாழ்ந்து சிறந்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

வாழ்தல் இனிது