வீடென்பது என்ன?
ஓரு வீடு,
ஒரு விலாசம்,
ஒரு அறை,
அனேகமாக உட்புறம் மூடியே இருக்கும் ஒரு சாளரம்
படுக்கையறையில் ஒரு பங்கு,
உடைகளின் அலமாரி
சமையலறைப் பாத்திரங்களில் ஒரு சில,
சாப்பிடும் தட்டொன்று.
மீன் தொட்டி,
வாசலில் தொங்கியபடி வளர்ந்து கொண்டிருக்கிற செல்வச் செடி.
புத்தகங்கள்,
ஓளிந்திருக்கும் ஒரு டைரி
மற்றும்
உறங்கக் கிடைக்காத இரவுகளில்
எங்கோ
தூரத்தில் ஒலிக்கிற
ஒரு பாடல்
சாலச்சுகம்.
