சாலச்சுகம் 8

                                                 தாளக்குறிப்பு                                    


உறங்கும் பறவையின்
சிறகு நுனிகளாய்த்
துளிர்ப்பது
யார் இரவு
பாதிக்கல்லும்
சிற்பமுமாய்
முடியும் வரை
எத்தனை
அழகு
மொழியறியாதான்
பிறழ்ந்தொலிக்கிற
மந்திரம்
போல அது
ரகசியமிலான்
கையிற்பட்ட
வெறும்மதியம்
சாலச்சுகம்
அருவிக்குக்
கரையில்லை
அலையுமில்லை
ஆனாலும்
தானே நீர்யுவம்
என்பதாகவொரு
கித்தாய்ப்பு
இங்கு தான் வந்து
சேர்ந்திருக்கிறது
இதுவரை