ஃபடாஃபட்


No description available.

நிகழ்ந்தது
ஒருமுறைதான்
என்றபோதும்
ஒவ்வொரு முறையும்
நிகழ்ந்தது.
ஃபடாஃபட்

அந்த முகத்தை
அந்தச் சிரிப்பை
அந்த மௌனத்தை
தான் மட்டும்
இன்னும் எஞ்சுவதன்
அபத்தத்தை
வியக்கிறது
ஃபடாஃபட்.

அதன் அர்த்தம்
அதற்கு மட்டும்
தெரியும்
ஃபடாஃபட்.

வேறொன்றுமில்லை
தன்னையும்
அழைத்துக் கொண்டு போயிருக்கலாம்
என அங்கலாய்க்கிறது
ஃபடாஃபட்.

அந்த வார்த்தையைத்
தேய்த்ததும்
வெளியாகித்
தன் கரங்களைப்
பின்புறம் கட்டியவாறு
எள்ளலான குரலில்
“ஹுஸூர் நீங்கள் எந்தன் அடிமை”
என்றது
ஃபடாஃபட்.