ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்

க்ளப் ஹவுஸில் நேற்று பாடகி ஜென்ஸி அவர்களுடன் ஓர் உரையாடல் என்கிற நிகழ்ச்சியை எழுத்தாளர் தமயந்தி ஒழுங்குசெய்தார். பலதரப்பட்ட ரசிகர்கள் நெகிழ்வும் மகிழ்வுமாய்ப் பங்கேற்ற நிகழ்வு இது. ஜென்ஸி மறக்கமுடியாத தனித்துவமான ஒரு குரல். தமிழ்த் திரைப் பாடல் வரலாற்றினை ஜென்ஸியின் பெயரின்றி எழுதிடவே இயலாது. பல ஆண்டுகளுக்கு முன்னால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடிய ஜென்ஸி ஒரு காலகாலப் பிடிவாதத்தைப் போலவே இன்றும் நினைக்க, விரும்ப, ரசிக்கப்படுவது எல்லாமும் பாடல் என்கிற கலாவடிவத்தின் தனி நுட்ப மேஜிக். நேற்றைய மாலை மிகச் சிறப்பானதாக அமைந்தது. பல்வேறு தொழில்நுட்ப இடர்களுக்கு மத்தியிலும் இதனை நேர்த்தியாக ஒழுங்கு செய்தார் தமயந்தி. பாவலர் வரதராஜனின் புதல்வர் பாவலர் சிவா அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதும், பாடியதும் மேலும் தித்திப்பைக் கூட்டியது. பாடல் நாடல் என்றும் இனியது.