இன்றெல்லாம் கேட்கலாம் 6

இன்றெல்லாம் கேட்கலாம் 6

பானு பூமியா


Etho Ninaivugal Kanavugal SDHQ தமிழில் - Song Lyrics and Music by KJY,  Shailaja arranged by Shanthi20 on Smule Social Singing app
இளையராஜா தமிழுக்காக மீவுரு செய்த பாடல் தான் 
{TO HEAR THE SONG CLICK HERE}ஏதோ நினைவுகள் கனவுகள்மனதிலே மலருதே என்ற பாடல். அகல் விளக்கு படத்தில் இடம்பெற்றது. விஜய்காந்தின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. 1979 ஆமாண்டு வெளிவந்தது. ஆர்.செல்வராஜ் இயக்கியது. மதுரை நகரத்தில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை. படத்தின் டைடில்ஸ் முழுவதும் அன்றைய மதுரையின் வீதிகளும் தலங்களுமாய்ப் பெருக்கெடுக்கும் சலனபிம்ப நகர்வுகள் மட்டுமே இடம்பெற்றன. படத்தில் விஜய்காந்தின் பெயர் தனுஷ்கோடி ஷோபாவின் பெயர் நவநீதம். இன்னொரு நாயகி வருவார் ஸ்ரீலேகா என்று பேர் இருந்ததாக நினைவு. டாக்டராக வருவார். கோபக்கார இளைஞன் தனுஷ்கோடி வேடத்தில் வலம் வந்தார் விஜய்காந்த். இந்தப் படத்திற்கு முன்பாக ஆர்.செல்வராஜ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஹிட் படங்களின் திரைக்கதை ஆசிரியராகப் பெரும் புகழை ஈட்டியிருந்தார். பொண்ணு ஊருக்குப் புதுசு பகவதிபுரம் ரயில்வேகேட் எங்கிருந்தாலும் வாழ்க நீதானா அந்தக்குயில் மற்றும் சிகப்பு நிறத்தில் சின்னப்பூ போன்ற படங்களை இயக்கிய செல்வராஜ் திரைக்கதை ஆசிரியராகப் பெற்ற பெரும்புகழை இயக்குனராகப் பெறவில்லை,
அன்னக்கிளி கவிக்குயில் கிழக்கே போகும் இரயில் புதிய வார்ப்புகள் புதுமைப் பெண் இதயக்கோயில் உதயகீதம் முதல் மரியாதை சின்னக்கவுண்டர் கோயில் காளை ராசைய்யா அலைபாயுதே ஈரநிலம் என செல்வராஜ் கதை நல்கிய பல படங்கள் காலம் கடந்து ஒளிருபவை.

Maathu Tappada Maga Kannada Super 7 Vinyl Record by Ilayaraja - Ilayaraaja,  Kannada, Vinyl Records - Mossymart
முந்தைய 1978 ஆம் வருடம் பெகெட்டி ரமணா எனும் இயக்குனர் பாரதா சினி ஆர்ட்ஸ் வழங்க, ‘மாத்து தப்பாத மகா’ என்ற படத்தை இயக்கினார். ஆனந்த் நாக்,ஆரத்தி, சாரதா இவர்களுடன் ரஜினிகாந்த் நடித்த நேரடிக் கன்னடப் படமான இது தான் சூப்பர் ஸ்டாரின் 25 ஆவது படமும் கூட. இந்தப் படத்துக்காக இளையராஜா இசையில் எஸ்பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி பாட பானு பூம்யா எனத் தொடங்கும் அழகான டூயட் பாடல். இதன் அடி நாதம் உற்சாகமான காதல் கிறக்கச் சார்புடன் அமைந்திருந்தது. பாலுவும் அப்படியான சார்தலோடு பாடி இருந்தார். இதனைக் கன்னடத்தில் எழுதியவர் ஆர்.என்.ஜெயகோபால். நாயகன் படத்தில் ரெட்டி சகோதரர்களில் ஒருவராக வருவாரே, மைக்கேல் மதன காமராஜனில் கமலின் சித்தப்பாவாக நாசரின் தந்தையாக வருவாரே.அவர் தான் ஆர்.என்.ஜெயகோபால். பத்மஸ்ரீ பட்டம் வென்ற பழம்பெரும் திரைக் கலைஞரான ரட்டிஹள்ளி நாகேந்திர ப்ரசாத்தின் புதல்வர். இவரது சகோதரர்கள் ஆர்.என்.கே ப்ரசாத் மற்றும் ஆர்.என்.சுதர்ஸன். இருவரில் ப்ரசாத் மைக்கேல் படத்தில் அவரே கமல்களின் தந்தையாக வருவார். சுதர்ஸன் புன்னகை மன்னன் படத்தில் ரேகாவின் பணக்கார அப்பாவாக வருவார் முன்னர் சுமதி என் சுந்தரி தொடங்கி பாயும்புலி வேலைக்காரன் எனப் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் குறிப்பிடத் தகுந்த பாடலாசிரியரும் இயக்குனருமான ஜெயகோபால் எழுதிய {TO HEAR THE SONG CLICK HERE} பானு பூமியா பாடலைத் தமிழில் அகல் விளக்கு படத்துக்காகத் தமிழுக்குப் பெயர்த்து வந்தார் இசைஞானி.அந்தப் பாடலை இங்கே எழுதியவர் கங்கை அமரன். பாடியவர் கேஜே.ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.சைலஜா இருவரும். குரல்களைத் தவிரவும் பாடலின் தொடக்க இசை மற்றும் இடையிசையிலும் சின்னச்சின்ன வித்யாசங்களை செய்திருந்தார் ராஜா.
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம்தான் வேண்டும்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
வாழும் நாள் வேண்டும்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும் சேரும் நாள் வேண்டும்
(ஏதோ நினைவுகள்)
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்
ஆண் : காற்றினில் செல்லும்
என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும்
(ஏதோ நினைவுகள்)

 

இந்த இரு பாடல்களையுமே இன்றெல்லாம் கேட்கலாம்.