சாலச்சுகம் 1

 


அந்தக் குழந்தைக்கு
முத்தமிடத் தெரியவில்லை.
நீட்டிய கன்னங்களில்
வெறுமனே தன்
வாயைத் தீற்றுகிறது.
இவ்வுலகின்
கச்சித முத்தங்களுக்கான
பேரேட்டில் அந்தத் தீற்றல்
இடம்பெறுமாவெனத் தெரியாது.
என்றபோதும்
கொடுக்கத் தெரியாத முத்தம்
கால்தடம் பாவாத பெருவனம்
போல அது
சாலச்சுகம்.