சாலச்சுகம் 17

                                                           உப சொற்கள்


ஆமாம் என்று ஒத்துக்கொள்வது இயலாது
இல்லை என்று மறுப்பது ஆகாது
இருக்கலாம் என்ற சொல் ஆறுதலாயிருக்கிறது
சரி என்பதும் தவறு என்பதும்
உதவாத இடங்களில்
பரவாயில்லை என்றொரு நடுவாந்திரம்
இருக்கிறாற்போல்
“சந்தோஷமா, கோபமா?” என்று
சுழன்றாடும் ஒருத்தியிடம்
“காதலி நீ தானடி”
என்று சத்தியம் செய்வதற்கு
உத்தமபுத்திர மனசு
வாய்க்காதவரைக்கும்
உபசொற்கள் ஆபத்பாந்தவம்
சாலச்சுகம்