சாலச்சுகம் 9


ஏன் இந்த மேஸ்திரிகள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த சமையல்காரர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த நடிகர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த நீதிபதிகள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த காவலர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த கோமாளிகள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த கொலைகாரர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த பாடகர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த நாட்டியக்காரர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த பிச்சைக்காரர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த கவிஞர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த டீவீ நிகழ்ச்சிகளைத்
தொகுத்து வழங்குபவர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த ஏற்பாட்டாளர்கள் இப்படி இருக்கிறார்கள்
ஏன் இந்த ப்ரேதங்கள் இப்படி இருக்கின்றன
ஒவ்வொரு தோட்டாவிலும் அது துளைக்கப் போகும்
மார்புக்கூட்டுக்குச் சொந்தமானவரின்
பெயரெழுதப் பட்டிருக்கும்
ஒவ்வொரு பீட்ஸாவிலும் அதைத் தின்னப்போகும்
உதடுகளின் ரேகை
பதியனிடப் பட்டிருக்கும்
போல அது
சாலச்சுகம்