சுமாராதல்

சுமாராதல்

என் குழந்தைகளுக்கு
தனித்த திறமைகளேதும்
இருக்கவில்லை.
பாடவாசிப்பைத் தாமதமாகவே
மனனம் செய்கிறார்கள்
தகவல்பிழைகளோடு பேசுகின்றனர்
சுத்தமும் ஒழுங்கும்
பலமுறை சொல்லிக் கொடுத்தபின்பும்
குறைவைப்பவர்கள்
மேலும்
சப்தமாகச் சிரித்துக் கொண்டும்,அழுதுகொண்டும்
பல வேலைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாகச்
சென்று வருபவர்கள்.
கூட்டங்களிலிருந்து
வரிசையாய் நிற்கச்சொன்னாலோ
ஓடச்சொன்னாலோ
பாதிக்குமேற்பட்டவர்களுக்குப்
பின்னால்தான் செல்கிறார்கள்
நல்லவேளை.