வலைப்பூ

மனோபாலா

மனோபாலா:அரிதாரம் தேவையற்ற கோமாளி   மனோபாலாவை இயக்குனர் என்று முதன் முதலில் உற்று கவனித்த படம் ஊர் காவலன். எண்பதுகளில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை எஸ் பி முத்து ராமன் அல்லது ராஜசேகர் இருவரில் ஒருவர் தான் இயக்கினார்கள். சத்யா… Read More »மனோபாலா

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதியன்று மதுரை- மேலூரில் பாபு சசிதரனின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்ற இருக்கிறேன். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் கலந்துகொள்ள வரவேற்கிறேன்.      

வைகை இலக்கியத் திருவிழா

தமிழக அரசு முன்னெடுக்கும் இலக்கிய விழாக்கள் மாவட்டந்தோறும் நடந்தேறி வருகின்றன. அந்த வரிசையில் நாளை 26-03-2023 மற்றும் திங்கட்கிழமை 27-03-2023 இரண்டு தினங்கள் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தினுள் வைகை இலக்கியத் திருவிழா நடக்கவிருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல்… Read More »வைகை இலக்கியத் திருவிழா

இன்றெலாம் கேட்கலாம் 8

இன்றெலாம் கேட்கலாம் 8 வணிக சினிமாவின் தகர்க்க முடியாத தூண்கள் பல. அசைக்கவே நாளாகும். தவிர்க்கப் பெருங்காலம் தேவை. எழுபதுகளில் பத்தில் ஒரு படத்தின் நாயகன் சோகப்பாட்டைக் குடித்து விட்டுப் பாடுவான் அல்லது குடித்தபடி பாட முயலுவான். எண்பதுகளில் குடி+சோகம் என்றே… Read More »இன்றெலாம் கேட்கலாம் 8

கதைகளின் கதை 8

கதைகளின் கதை 8 வாழ்வாங்கு வாழ்தல் இருளின் திசையுள் புகுந்து செல்கிறவனுக்கு முதல் வெளிச்சமாகச் சின்னஞ்சிறு ஒளிப்பொறி கிட்டினால் கூடப் போதும்.ஒருவேளை அப்படியானதொரு சிறுபொறி கிடைக்கவே இல்லாமல் போனாலும் காலம் அடுத்த தினத்தின் அதிகாலையைப் பெருவெளிச்சமாக்கித் தரும்.ஆகக் காலம் எதிர்த்திசையில் தன்… Read More »கதைகளின் கதை 8

மொழிவழி மூலிகை

மொழிவழி மூலிகை முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் நூல் தென் கிழக்குத் தென்றல். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் தாவோ-ஜென்-சூஃபி குறித்த தத்துவப் பகிர்தல்களை வாசிக்க முடிகிறது. தாவோ பகுதிக்கான அணிந்துரையை எஸ்.ராமகிருஷ்ணனும் சூஃபி பகுதிக்கான முகவுரையை… Read More »மொழிவழி மூலிகை

18 சுமாராகப் பாடுகிறவள்

சமீபத்துப்ரியக்காரி 18 சுமாராகப் பாடுகிறவள் “சுமாராகப் பாடினேனா? என்றாள், பாடி முடித்து விட்டு. மெல்லப் புன்னகைத்தேன். ஒரு பாடலைப் பாடி முடித்த பிறகு அடுத்த சொல்லைப் பேசுவதென்பது மிகவும் கவனத்திற்குரியதாகிறது. அப்படியான சொற்களின் எடை ஒரு பாடலுக்கு நிகராய் இருந்து விடுபவை.… Read More »18 சுமாராகப் பாடுகிறவள்

மான் தின்ற சிங்கம்

மான் தின்ற சிங்கம் சரியான குளிர். இந்த வருடத்துக்கான  பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான… Read More »மான் தின்ற சிங்கம்

இருவிழாக்கள்

இருவிழாக்கள் காலாபாணி நாவல் இந்த வருடத்திற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. மதுரை மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக மண்டபத்தில் விஜயா வேலாயுதம் அவர்களது ஏற்பாட்டில் விருது பெற்ற முனைவர். மு.ராஜேந்திரனுக்குப் பாராட்டு விழா கடந்த 5 ஆம் தேதி நடந்தேறியது. கூட்டத்தில்… Read More »இருவிழாக்கள்

எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 11 பெயர் பெற்ற தருணம் _____________ உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு இதை அவ்வப்போது கேட்கையில் மனம் அடைகிற இன்ப-வினோதம் ரசமானது. எல்லோருக்குமே அவரவர் பெயர்களை மெத்தப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. தன்னை வெறுத்தலின் பெரும்பகுதியாகவே தன்… Read More »எனக்குள் எண்ணங்கள் 11