துரோஜன் குதிரை

இன்றைய கவிதை


தமிழினி வெளியீடாக ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள் முழுத்தொகுப்பாக வந்திருக்கிறது.
பக்கங்கள் 440.
விலை ரூ 450


மோகனரங்கனின் கிறங்கச்செய்யும் புனைவு மொழி சாதாரணங்களிலிருந்து அகற்றித் தரும் அசாதாரண-அபூர்வங்களின் காட்சித் திரள்கள். நோக்கத் தக்கவற்றை ஒவ்வொரு இழையாக எடுத்தெடுத்து வானில் எறியத் தலைப்படுகின்றன. முதிய மந்திரவாதி ஒருவனின் சொற்களற்ற புன்னகைத் தருணங்களாய் வாசகனின் மனத்துள் நிறைபவை. நன்கு அறிந்த வழமையான நிகழ்வுகளின் மீண்டும் மீண்டும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய எண்ணற்ற வருகைகளின் மத்தியில் சிறு தெறலென ஒருவனுக்கு மாத்திரம் காணவாய்க்கிற மின்னற் பொற் கணமென எஞ்சுபவை.  விட்டகன்று பலகாதம் சென்ற பிறகும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக் கூடிய நீங்காமையும் சொல்முறை நேர்த்தியும் மிகுந்தவை இக்கவிதைகள்.

What Is a Trojan Horse? | Wonderopolis

தொகுப்பின் ஒரு கவிதை

துரோஜன் குதிரை

நான் பிறந்த
என்னைச் சூழ்ந்த
சமுதாயம் என்னுள்
புகுந்து ஒளிந்து
மறைந்தது
எங்கென்று தேடினேன்
காணவில்லை கண்டதும்
நான் என்ற
துரோஜன் குதிரை
பரிசாக நின்றது
என்னுள்