இரவை நெய்தல்

இன்றைய கவிதை


இரண்டு கவிதைகளை இன்றைக்கு பகிரலாம் என நினைக்கிறேன்

“சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்” என்ற தலைப்பில்
பூமா ஈஸ்வரமூர்த்தியின் சமீபத்திய கவிதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது 104 பக்கங்கள் கொண்ட இதன் விலை 100 ரூபாய். பூமா ஈஸ்வரமூர்த்தியின் எட்டாவது நூல் இது.May be an image of one or more people and outdoors

 

கவிதை ஒரு அனுபவமாக மறைபொருளைக் காணத் தருகிற காட்சி ரூபமாக வாசகனுக்கு கிடைப்பது ஒரு விதம். இன்னொரு விதம், மூடிய கண்களைத் திறவாமல் சலூன் நாற்காலியில் சவரத்துக்குத் தன் முகத்தை ஒப்புக்கொடுத்திருப்பவன் காதருகே சன்னமான குரலில் ரகசியத்தை அறிய தருவது. பூமாவின் கவிதைகள் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவை. என்னளவில் நவீன கவிதைகளுள் காதலை, அதன் நேரடித் தாக்கத்தைக் கவிப் பொருளாக்கி அதிகமும் கவிதைகளைப் புனைந்தவர் பூமா ஈஸ்வரமூர்த்தி எனச் சொல்ல விரும்புகிறேன். நுட்பமான அவதானம் ஒன்றை பழக்கப் படுத்திக் கொண்டே செல்லக்கூடிய அனுபவ விரிதல்கள் இக்கவிதைகள் எங்கும் காணக் கிடைக்கின்றன.

Do you find 'The Garden of Earthly Delights' by Bosch (painted sometime between 1480-1505) to anticipate surrealism? - Quora

 

இரவை நெய்கிறது பார்
சிலசமயம் சிலந்தியும்
நெய்து தருகிறேன் என
வரிசையில் வந்து நிற்கும்
கூடுகட்டத் தெரிந்த பறவையின்
அலகால்
இரவு நெய்யப் பெறுகிறது
நிச்சயமாக சொல்ல இயலும்
அய்ந்து நிலப் பூக்களால்
இரவு நெய்யப் பெறுகிறது

எந்த நிலப் பூக்கள்
எந்த நாளில் அதிகம்

நாமறிந்த பூக்களின் அறியாத புத்தம் தன்மையை எத்தனை அழகாக வெளி சொல்ல முடிகிறது பாருங்கள்

இன்னொரு கவிதை இதே தொகுதியில்

இந்த பூவின் பெயரென்ன
அதுவல்ல கேள்வி இப்போது
இது ஒரு பூ. அவ்வளவே
எப்போதும்

வாசிக்க வேண்டிய தொகுப்பு