சாலச்சுகம் 19

அனர்த்தங்களாய்ப்
பெருகும்
ஆயிரமாயிரம்
வாழ்வுகளின்
இருள் நடுவே
அகல்-சிறு-தெறல்
போலவொரு
ஒளி

நீ
சுடரடி நிழல்
போன்றதென்
னன்பு
சாலச்சுகம்