வலைப்பூ

சலனமின்றி மிதக்கும் இறகு

சலனமின்றி மிதக்கும் இறகு சென்னை பாம்குரோவ் விடுதியின் கருத்தரங்கக் கூடத்தில் கடந்த ஞாயிறன்று காலை ப்ரியா பாஸ்கரனின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா நடந்தேறியது. பதிப்பாளர் வேடியப்பன் வரவேற்றார். நிகழ்வை ப்ரீத்தா மலைச்சாமி தொகுத்து அளித்தார். மூத்த… Read More »சலனமின்றி மிதக்கும் இறகு

இசையோடு இயைந்த நதி 4

பேசும் புதிய சக்தி இதழில் நான் எழுதி வருகிற இசையோடு இயைந்த நதி பாடலாசிரியர்களைப் பற்றிய தொடரில் இந்த அத்தியாயம் எம்.ஜி.வல்லபன் குறித்த வல்லமைக் கவி வல்லபன் இடம்பெற்று உள்ளது. வாசித்து இன்புறுக

எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

மிட்டாய் பசி – ஆத்மார்த்தி மதுரையில் தொடங்குகிறேன். மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா… Read More »எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

16 தாமதி

சமீபத்து ப்ரியக்காரி  16 தாமதி 1 கூந்தல் பிரிகளுடனே வீதியிலெறியப்பட்ட பற்கள் நொதித்த சீப்பின் மீது துளிர்த்து எஞ்சியிருக்கும் சென்ற மழையின் ஈரத்தை மணி நெல்லோவென்றெண்ணி ஒரு முறைக்கு இருமுறை கொத்திப் பார்த்து விட்டுத் தத்தியபடி பறக்க முற்படுகிற பசித்த குருவியின்… Read More »16 தாமதி

பிரதாப்

பிரதாப் போத்தன் தன் முகத்தாலும் கண்களாலும் பெருமளவு நடிக்க முனைந்த நடிகர். நடிகனுக்கு உண்டான நல்லதொரு லட்சணம் அதீதமான குரல் கொண்டு வசனங்களை ஏற்றி இறக்கிப் பேசி நடிப்பதன் மூலமாகப் பார்வையாளர்களின் கவனக் கவர்தலை நிர்ப்பந்திக்கக் கூடாது. வசனத்தைத் தாண்டிய, அதனைக்… Read More »பிரதாப்

இசையோடு இயைந்த நதி 3

இந்த மாதம் பேசும் புதிய சக்தி இதழில் நான் எழுதிவருகிற இசையோடு இயைந்த நதி பாடலாசிரியர்களைப் பற்றிய தொகைத் தொடர்பத்தியில் செந்தூரக் கவி கங்கை அமரன் என்ற அத்தியாயம் வெளியாகி உள்ளது. வாசியுங்கள் அன்பர்களே    

1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்

கதைச்சுருக்கம் 1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் சினிகோ பிலிம்ஸ் தயாரிப்பில் 1988 ஆமாண்டு பொங்கலுக்கு வெளியான படம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன். இந்தப் படம் முழுமையான திரைக்கதை அமைப்புக்கு எடுத்துக் காட்டு. சோகம் ததும்பும் முன் கதை. தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி பாடலை ஜெயச்சந்திரன்… Read More »1 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்

அந்திமழை-கட்டுரை

இம்மாத அந்திமழை இதழில் நான் எழுதியிருக்கும் கெட்ட பய ஸார் இந்தக் காதல் கட்டுரை நிழல் உலகின் காதலைப் பேசுகிறது. வாசியுங்கள் அன்பர்களே    

15 பெரிய பூ

சமீபத்துப் ப்ரியக்காரி 15 பெரிய பூ அந்த வீதி எனக்கு மிகவும் பரிச்சயம். என் தோற்றுப்போன முதல் சில காதல்களில் ஒன்று கூட அங்கே நிகழ்ந்ததாக ஞாபகம். விஷயம் அதுவல்ல. அந்த வீதி சடாரென்று நடுவில் வளையும். வாழ்வின் எதிர்பாராமையைத் தனதே… Read More »15 பெரிய பூ

இந்நலே வரே

இந்நலே வரே சோனி லைவ் OTT சேனலில் ஆசிப் அலி நடித்த இந்நலே வரே பார்த்தேன் பாபி சஞ்சய் இரட்டையர்களின் கதை வசனம். இது ஆசிப் மற்றும் இயக்குனர் ஜிஸ் ஜாய் இணையும் நாலாவது படம். த்ரில்லர் படங்களுக்கென்று ஒரு தனி… Read More »இந்நலே வரே