வாழ்த்து

பெருநிழல் பறவை

சரவணன் சந்திரன் அன்பு நண்பன். எழுத்தின் மீது எப்போதும் தீராத தாகம் கொண்ட பெருநிழல் பறவை அவன். அவனது எழுத்துக்கு நான் ரசிகன். அவன் எழுத்தின் ஊடுபாவுகளை வாழ்வெங்கும் சந்திப்பதற்கான வாய்த்தல்கள் என்னை ஆச்சர்யமூட்டுபவை. வேகமும் நிதானமும் கொண்ட வினோத மனப்பான்மை… Read More »பெருநிழல் பறவை

பா.ராகவன்

பா.ராகவன் இன்றைக்கு பா.ராகவனுக்குப் பிறந்த நாள். நான் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே கல்கி இன்ன பிற இதழ்களில் எங்காவது அடிக்கடிப் பார்த்துக் கொண்டே இருக்க வாய்த்த பெயர் ராகவனுடையது. மாபெரும் திமிங்கிலங்களின் காலத்தில் ஒரு குட்டி மீன் நீந்தியும் ஒளிந்து மறைந்தும்… Read More »பா.ராகவன்

பூவின் பூக்கள்

வண்ணதாசன் அந்நியமற்ற எழுத்தால் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்பவர். அவருடைய கதைகள் தோரணப் பூக்களைப் போல் பரிச்சயத்தின் தற்கணங்களாகப் பெருகுகின்றன. வாழ்வின் நிமிஷங்களை மனிதர்களைப் பார்ப்பதற்கு உகந்த பார்வைமானிகளை உற்பத்தி செய்துகொள்ளக் கற்பிப்பவை. சின்னஞ்சிறிய எவற்றையும் சட்டென்று கடந்து விடுவதிலிருந்து மீண்டும்… Read More »பூவின் பூக்கள்

கவுண்டமணி

எத்தனையோ படங்கள் திரைக்கதை இன்னபிற சொதப்பி எடுத்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு பார்த்ததற்குப் பாடல்களும் பின்னணி இசையும் காரணங்களாக இருந்திருக்கின்றன. கூடவே அப்படியான படங்கள் பலவற்றைப் பார்த்ததற்கு முக்கியக் காரணம் என்று இன்னொருவரைச் சொல்ல முடியும். அவர் தான் மகான் கவுண்டமணி.… Read More »கவுண்டமணி

ஜெயமோகன்

ஜெயமோகன் காலகால ஒளி ஜெயமோகனை எப்போது முதன்முதலில் வாசித்தேன் என்பது குழப்பமாகத் தான் நினைவிலிருக்கிறது. நன்கு அறிந்து வாசித்தது பின் தொடரும் நிழலின் குரல். அதற்குப் பல வருடங்கள் முன்பே சின்ன சைஸ் கணையாழியில் என நினைவு என் பதின்மத்தின் பாதி… Read More »ஜெயமோகன்

இளங்கோவன் முத்தையா

அன்பு நண்பர் இளங்கோவன் முத்தையாவுக்கு இன்று பிறந்த நாள். மதுரையில் வங்கியியல் சார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிற இளங்கோவன் ரசனை மிகுந்த மனிதர். தனக்கென்று தனித்த பார்வைகள் கொண்ட நண்பர். இவரது விம்லா உள்ளிட்ட சிறுகதைகள் பரவலான வாசிப்பையும் கவனத்தையும்… Read More »இளங்கோவன் முத்தையா

ஸ்ரீநிரா

இனிய நண்பர் வழக்குரைஞர் இலக்கியத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர் அபாரமான நகைச்சுவை உணர்வை வெளிப் படுத்துபவர் கவிதையின் மீது பெரும் பிரியம் கொண்டவர் அன்புச்சகோதரர் ஸ்ரீநிவாச ராகவன் என்கிற ஸ்ரீநிரா, அவருக்கு இன்று பிறந்தநாள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ… Read More »ஸ்ரீநிரா

நரன்

அன்பு நண்பர் கவிஞர் நரனுக்கு இன்று பிறந்த நாள். அவருடைய சால்ட் பதிப்பகத்தின் மூலமாக வெளிவருகிற புத்தகங்களின் உட்பொருளைப் போலவே அதன் வடிவமைப்பும் வெகு சிறப்பு. ப்ரிய நண்ப…இன்னும் எண்ணுக. எழுதுக என்று வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது  

ராஜேஷ்குமார்

இன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 75 ஆவது பிறந்த தினம். முற்பகல் அவரை வாழ்த்துவதற்காக மூன்று முறை அழைத்த போதும் லைன் பிஸி என்றே வந்தது. சரி வாழ்த்து மழையில் நனைகிறார் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டேன். அடுத்த பத்தாவது… Read More »ராஜேஷ்குமார்

இளம்பரிதி

இளம்பரிதி  பரிதி பதிப்பக உரிமையாளர் இளம்பரிதி என்னுடைய ஆடாத நடனம் நட்பாட்டம் நூல்களைப் பதிப்பித்தவர். பழகுவதற்கு இனியவர். எளியவர். அவரது பிறந்த நாளில் அவரை அன்போடு வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது