கவிதை

டச்-வுட் 2

ஸ்வர்ணக்குவியலைப் பெற்றுக் கொண்டு வெல்லமிட்ட அவலைப் பரிசளித்தவனின் காதுகள் இன்று நீ உபசரிக்கவிருக்கும் திரவத்துக்கு ஈடாய் என்னால் என்ன தரமுடியும் நண்பா என் காதிரண்டும் உன் காலடி அடிமைகள். சொல்ல முயற்சித்து முழுமையாகாமற் போகவிருக்கும் உந்தன் கதைச்சோகம் முழுமையையும் கேட்டுத் திளைக்கட்டும்… Read More »டச்-வுட் 2

டச் வுட் – 1

என் வாழ்வின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது உன்னைக் கண்டுபிடித்தே ஆவது. அதன் பின், வேறேதும் நோக்கமில்லை. கண்டுபிடித்த உன் முன் அந்தக் கணத்தின் என்னை நிறுத்தி வைப்பதோடு அந்த நோக்கம் நிறைந்துவிடும். எதிர்பாராமையோ அச்சமோ கொண்டபடி அந்தத் தோன்றலை… Read More »டச் வுட் – 1

ஹம்மிங்

எப்போதும் எதையும் பாடியிராதவள் யாரும் சமீபத்திலில்லை என்பதான சூழல்வேகத்தில் அந்தப் பாடலின் இடைவரியொன்றைத் தன்னையறியாது பாடுகிறாள் அந்தவரி அடுத்த கணமே ஒரேயொரு ஒருவரிப்பாடலாக அனிச்சைகளின் பேரேட்டில் தன்னையெழுதிக் கொள்கிறது. இனிமேல் அந்தப் பாடல் என்னைக் கடக்கையிலெல்லாமும் அந்தவொரு வரி இவள் குரலில்… Read More »ஹம்மிங்

19 தனியளின் சம்பாஷணை

சமீபத்துப் ப்ரியக்காரி 19 தனியளின் சம்பாஷணை 1 “இன்றைக்கும் நிலவு வரும்” என்கிற எண்ணத்தில் தொடங்குகிறது உறங்காமையின் இதிகாசம். 2 நிலா பார்த்தல் என்பது அடிமையைப் பழக்குவதற்கான உத்தம உபாயங்களிலொன்று. 3 எப்படி உறங்குவது என ஒரு கண் வெடிக்கையில் ஏன்… Read More »19 தனியளின் சம்பாஷணை

20 வான்பாதி

20 வான்பாதி சிறுபிள்ளை மணிக்கட்டு வலிக்க வலிக்க ஏற்றிக் கொண்டிருக்கையில் சட்டென்று நூலறுபடுகிற பாதிவான் பட்டம் போலொரு பெரிய விக்கல் அதற்கு நடுவே வெறித்த கண்களோடு உயிரைவிடுகிற நாள்பட்ட பிறழ்சாட்சியக் காரன் வெளிப்படுத்தச் சித்தங்கொண்ட முதலாவது உண்மைபோலவே எனக்குள்ளே புதைந்தழியட்டும் எனதன்பு… Read More »20 வான்பாதி

19.கவிதை என்பது என்ன

கவிதை என்பது என்ன திக்கித்து இருப்பதா மௌனித்திருப்பதா இடத்திலிருந்து எழுவதும் நகர்வதுமா (மழை வருகிறாற் போலிருக்கிறதல்லவா என்றபடியே கடந்து சென்றவனின் முதுகையே வெறித்தேன்) மழை வருதலா முதுகை வெறித்தலா (ஏன் நேத்து வரேன்னு சொல்லிட்டு வர்லை என்று செல்லம் கடிந்து நெஞ்சில்… Read More »19.கவிதை என்பது என்ன

18 சுமாராகப் பாடுகிறவள்

சமீபத்துப்ரியக்காரி 18 சுமாராகப் பாடுகிறவள் “சுமாராகப் பாடினேனா? என்றாள், பாடி முடித்து விட்டு. மெல்லப் புன்னகைத்தேன். ஒரு பாடலைப் பாடி முடித்த பிறகு அடுத்த சொல்லைப் பேசுவதென்பது மிகவும் கவனத்திற்குரியதாகிறது. அப்படியான சொற்களின் எடை ஒரு பாடலுக்கு நிகராய் இருந்து விடுபவை.… Read More »18 சுமாராகப் பாடுகிறவள்

17 பேசாமடந்தை

சமீபத்துப்ரியக்காரி 17 பேசாமடந்தை அவளுக்குக் கோபம். தாங்க முடியாத பழிநிறைக் கோபம் அது. இப்போதெல்லாம் ஒவ்வொரு சொல்லாப் பேசுகிறாள். முன்பிருந்த ஆதுரம் முற்றிலுமாய் நீக்கம் செய்யப்பட்ட வேறோர் குரல். நாடறிந்த நடிகனொருவன் தொண்டைப் புண்ணால் பேசமுடியாமற் போகையில் பண்டிகைக் காலத்துக்கு வந்தேயாக… Read More »17 பேசாமடந்தை

4 கவிதைகள்

குடி வாசனை பற்றிய 4  கவிதைகள் 1 ஒன்றுக்கு மேற்பட வேண்டுமா இதைக் குடி 2 அந்தப் பறவை இங்கே தான் இருக்கிறது. அதே பறவை அங்கேயும் இருக்கிறது. இன்னும் சில இடங்களிலும் இருப்பேன் என்றபடி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதனருகாமையில்… Read More »4 கவிதைகள்

அந்தாதி

1 இரு புறங்களிலும் கரமூன்றிச் சற்றுநேரம் சும்மா அமர்ந்துவிட்டுப் புறப்பட ஏதுவாய் ஒரு கல் இருக்கை யாருமற்று 2 யாருமற்று படபடக்கிற நேரங்கெட்ட தூறலின் துளிகளைத் தானியமென்றெண்ணி அமர்ந்தவிடத்திலிருந்து எழுந்தெழுந்து வேறிடத்தில் அமர்கிறது சாம்பல் வெண் பறவை. 3 பறவையின் ப்ரேதவுடல்… Read More »அந்தாதி