கவிதை

சாலச்சுகம் 4

தெ வி ட் டா த  தெ ள் எனக்கு வேண்டியதெல்லாம் தலைமறைவுக்கென யாருமறியாத ஓரிடம் மனித நுழைதல் நடைபெற்றிராத ஆழ்வனம் ஆங்கோர் கனமரம் கிளைகளூடாக ஓர் குடில் உள்ளொரு படுக்கை அதில்  முடங்குகையில் மேலே போர்த்தவொரு கம்பளி போலவொரு மனசு சாலச்சுகம்

சாலச்சுகம் 3

மோனத்தவம் 1 மேதமையோவென்று நினைத்திருக்கக் கூடும் இத்தெய்வம் முன்னின்ற தேவகணம் வேண்டிக் கொள்வதற்கு ஏதும் தோன்றாத பேதமை என் மோனம். 2 விபத்தில் வெட்டுண்ட கரம் இன்னுமிருக்கிறாற் போலவே அவ்வப்போது பாவனை செய்யும் பழைய காலத்து ஞாபகக் கூச்சம் 3 கிணற்றில்… Read More »சாலச்சுகம் 3

சாலச்சுகம் 2

___________________________________________________________________ 1. நான் கேட்கவேயில்லை ஆனாலும் இரண்டு மனம் வாய்த்திருக்கிறது. ஒன்று நினைத்து வாடுகிறது மற்றது அதற்காக நொந்து கொள்கிறது. 2 எந்தப் பாவியோ நான் அருந்துவதற்காக வைத்திருந்த விஷத்தில் தண்ணீரைக் கலந்துவிட்டிருக்கிறான் 3 நீங்கள் அடைந்துவிட்டதாய் இறுமாந்து கொள்கிற அதே… Read More »சாலச்சுகம் 2

சாலச்சுகம் 1

  அந்தக் குழந்தைக்கு முத்தமிடத் தெரியவில்லை. நீட்டிய கன்னங்களில் வெறுமனே தன் வாயைத் தீற்றுகிறது. இவ்வுலகின் கச்சித முத்தங்களுக்கான பேரேட்டில் அந்தத் தீற்றல் இடம்பெறுமாவெனத் தெரியாது. என்றபோதும் கொடுக்கத் தெரியாத முத்தம் கால்தடம் பாவாத பெருவனம் போல அது சாலச்சுகம்.

ஓய்தலென்பது

  சிக்னலில் யாசித்தபடி வருகிற முதியவர் தனக்கு வழங்கப்பட்ட கரன்ஸி காகிதத்தை உற்றுப்பார்க்கிறார். யாசிக்கையில் வழக்கமாய்க் கிடைக்கிற பணங்களைவிடவும் பேரதிகமான அதன் மதிப்பை மீண்டுமீண்டும் சரிபார்க்கிறார். நடுங்கும் கரத்தால் அதனைத் தன் ஏதுமற்ற உடலில் எங்கனம் பத்திரம் செய்வதெனத் திகைத்தபடி ஒரு… Read More »ஓய்தலென்பது

பட்டாம்பூச்சி சட்டைக்காரன்

பட்டாம்பூச்சி சட்டைக்காரன் சாக்லேட்டுக்கு அழுது கண்கள் வீங்கவுறங்கும் குழந்தைக்குக் கிறிஸ்துமஸ் தாத்தாவா நனவிலி நிலை நோயாளியின் உயிர்த்துடிப்பு இயந்திரத்தில் கிடைக்கோடா சாலையோரத்தில் படுத்துக்கிடக்கிற இடுப்புகளைத் தட்டியபடியே  நடந்து கோணிபொத்திக் கிடக்கிறவளைத் தன் லாட்டியால் நிரடி புணர்வதற்குக் கவர்ந்து செல்லும் காவலாளியா சன்னலைத்… Read More »பட்டாம்பூச்சி சட்டைக்காரன்