நான் @ஆத்மார்த்தி,
பிறந்தது மதுரையில் ஜனவரி 23, 1977 அன்று மீனாட்சி பத்மநாபன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையாக.
மூத்த சகோதரி உமா தனது குடும்பத்தோடு லண்டனில் வசிக்கிறார். மதுரை ஆர்வி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
மற்றும் கே.புதூர் ஆர்.சி ஸ்கூலில் ஆரம்பக் கல்வி. தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்
கல்வியும் திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிக் கல்வியும் கற்றுத்
தேர்ச்சி.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல். முதுகலைப் பட்டப் படிப்பு மதுரை
காமராசர் பல்கலைக் கழகக் கல்லூரியில். முதுகலைப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டுப் பணியும்
தொழிலுமாய் வாழ்க்கை நகர்ந்தது. 2004 ஆம் வருடம் Dr.வனிதாவுடன் திருமணம்.
இரண்டு குழந்தைகள், ஷ்ரேயா மற்றும் சஞ்சய் நிதின்.
செல்பேசித் துறையில் 2010 ஆமாண்டு வரை ஈடுபாடு. தற்போது மதுரையில் ஒரு மருந்தக உரிமையாளர்
மற்றும் நூற்றாண்டுக்கு முந்தைய அரிய நூல்களின் சேகரிப்பு & விற்பனை எனப் பணிகள்.
எழுதத் தொடங்கியது 2010 ஆமாண்டு. இதுவரை 30 நூல்கள் வெளியாகி உள்ளன. வதனம் இலக்கிய அமைப்பு
இதுவரை இலக்கியம் சார்ந்த 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை ஒருங்கிணைத்துள்ளது. வதனம் பதிப்பகம்
மற்றும் நூல் விற்பனை ஆகியவை பிற செயல்பாடுகள். வதனம் நிகழ்வுகளில் முதுமுனைவர்.
வெ இறையன்பு இ.ஆ.ப (பணி நிறைவு). எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோருடைய எழுத்துப்
பணி சார்ந்த விழாக்களும் அடக்கம்.
குமுதம் இதழில் கவிதை 2.0, ஆனந்த விகடனில் நட்பாட்டம், கல்கியில் கடைசிப்பக்கம் தீபம் இதழில்
நீயல்லால் தெய்வமில்லை , புதிய தலைமுறை இதழில் மனக்குகைச் சித்திரங்கள்-ஞாபக நதி-
நிஜம் நிழலாகிறது, பாக்யாவில் வரலாற்றில் விநோதங்கள், தினத்தந்தியில் மக்கள் மனங்களைக்
கவர்ந்த குணச்சித்திரங்கள் தினமலர் வாரமலர் இதழில் காலத்தின் திரைக்கதை பாவையர் மலரில்
சொல்லாடல் மற்றும் கதைகளின் கதை போன்ற தொடர்கள் வெளியாகி உள்ளன. இதுவரை 90க்கு
மேற்பட்ட சிறுகதைகள் தமிழின் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.
தற்சமயம் தினமலர் வாரமலர் இதழில் ஸ்டார்ட் காமிரா ஆக்சன்- தொடர்பதிவு வெளியாகி வருகிறது.
கணையாழி இதழில் அப்பாவின் பாஸ்வேர்ட் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டது. அந்திமழை
இணைய இதழில் 100 அத்தியாயங்கள் புலன் மயக்கம் திரை இசை பற்றிய தொடர்பத்தி மின்னம்பலத்தில்
வனமெல்லாம் செண்பகப்பூ , தமிழினியில் மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் போன்றவை வெளியாகின.
முதல் நாவல் ஏந்திழை. இரண்டாவது நாவல் மிட்டாய் பசி 2020 ஆமாண்டு தமிழினி பதிப்பக வெளியீடாக வந்தது.
இந்த நாவல் 2020ம் ஆண்டுக்கான செளமா அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான விருதையும்
ஸ்ரீ பாலகுமாரன் அறக்கட்டளை வழங்கும் 2021 ஆம் வருடத்திற்கான “பாலகுமாரன் விருதையும் பெற்றுள்ளது.
வாழ்கால வாசகம் ” வாழ்தல் இனிது”