இசை

இன்றெல்லாம் கேட்கலாம் 1

பாடல்கள் என்றும் இனியவை. தன் சின்னஞ்சிறு கால்களால் கொலுசுகள் ஒலிக்கச் சட்டென்று கதவு தாண்டி வந்துவிடுகிற குழந்தையொன்றின் புன்னகை வருகை போலவே சில பாடல்கள் மனத்தின் அணுக்கமான சன்னலொன்றைத் திறந்து வைப்பவை. ஒரு தடவை யதார்த்தத்தின் எதிர்பாரா நேர்தலில் கேட்க வாய்க்கிற… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 1

ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்

க்ளப் ஹவுஸில் நேற்று பாடகி ஜென்ஸி அவர்களுடன் ஓர் உரையாடல் என்கிற நிகழ்ச்சியை எழுத்தாளர் தமயந்தி ஒழுங்குசெய்தார். பலதரப்பட்ட ரசிகர்கள் நெகிழ்வும் மகிழ்வுமாய்ப் பங்கேற்ற நிகழ்வு இது. ஜென்ஸி மறக்கமுடியாத தனித்துவமான ஒரு குரல். தமிழ்த் திரைப் பாடல் வரலாற்றினை ஜென்ஸியின்… Read More »ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்

எந்நாளும் தீராமழை 

  எஸ்பி.பாலசுப்ரமணியம் என்றதும் நினைவுக்கு வருகிற முதல் விஷயம் அவரது கனத்த சரீரம். அத்தனை பெரிய உருவத்தில் ஒரு புல்நுனிப் பனியளவு கர்வத்தைக் கூடக் காணவே முடியாது. தன் இயல்பிலிருந்தே அகந்தை விலக்கம் செய்து கொண்டு தன் சுயத்தைப் பணிவின் மலர்களால்… Read More »எந்நாளும் தீராமழை