இன்றெல்லாம் கேட்கலாம் 7

இன்றெல்லாம் கேட்கலாம் 7


இப்போது ராஜமவுலியோடு கலக்கி கொண்டிருக்கும் மரகதமணி  கீரவாணி எனும் பெயரில் தெலுங்கில் ஓங்கி ஒலித்தவர். இன்னும் ட்ரெண்டில் தொடரும் இசைஞர். இவருடைய குரல் வித்தியாசமானது கம்மங்காடு கம்மங்காடு காளை இருக்கு பசியோடு என்கிற பாடல் மறக்க முடியாதது

M. M. Kreem என்ற பெயரில் ஹிந்தியில் இசையமைத்தார் மரகதமணி. 1994 ஆம் வருடம் தெலுங்கிலும் அடுத்த வருடம் ஹிந்தியிலும் வெளியான படம் கிரிமினல் நாகார்ஜுனா ரம்யா கிருஷ்ணா மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் மகேஷ் பட் இந்த படத்தை இயக்கினார்.

Tollywood Music Director M M Keeravani Biography, News, Photos, Videos | NETTV4U

எஸ்பிபி பாடி, ஸ்ரீ வெண்ணிலா சீதாராம சாஸ்திரி எழுதிய ஒரு பாடல் ‘தெ லு சா ம ன சா‘ தெலுங்கில் சக்கை போடு போட்டது அதைவிட இந்தியில் அந்த பாடல் அடைந்த வெற்றி மிக அதிகம். தமிழில் எல்லாமே என் காதலி எனும் பெயரில் டப் செய்யப்பட்டது. ஒரு மிடில் பட்ஜெட் தமிழ் திரைப்படம் நல்ல வெற்றி அடைந்தால் எப்படியோ அந்த அளவுக்கு 50 தினங்கள் ஓடி வசூலை பெற்று வெற்றி அடைந்தது THE FUGITIVE என்கிற1993 ஆம் வருடம் வெளிவந்த ஆங்கில படம் அதனை அடிப்படையாகக் கொண்டு கிரிமினல் படம் உருவாக்கப்பட்டது. HARRISON FORD, TOMMY LEE JONES இருவரும் இணைந்து நடித்த படம் ANDREW DAVIS இப்படத்தை இயக்கினார்

Manisha Koirala's Performance in 'Dil Se...' Is One Of Her Finest Ever
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா வின் பேத்தி மனிஷா கொய்ராலா இந்திய திரைப்படங்களில் ஜொலித்த அயலக வாசிகளில் முக்கியமானவர் சௌசௌ தாகர் படத்தில் தனது இருபதாவது வயது நடிப்பதற்கு இரு வருடங்கள் முன்பே ஒரு நேபாள படத்தில் நடித்திருந்தார். விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கிய 1942: A Love Story படம் அவரை இந்திய உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது அதற்கு முன்பு அழகின் உருவகமாக ஹேமமாலினி ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு இணையாக மனிஷா கொய்ராலா குறிப்பிடப் பட்டார். வரிசையாக படங்களில் நடித்தார் தென்னிந்திய மொழிகளில் அவர் நடித்த முதல் படம் கிரிமினல் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் திரைப்படத்தில் நடித்தார் அதே சங்கரின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு பிறகு முதல்வன் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தார் ரஜினிகாந்த் உடன் மனிஷா நடித்த பாபா திரைப்படம் ரஜினியின் படுதோல்வி படங்களில் ஒன்றானது. போலவே கமலஹாசனுடன் மீண்டும் அவர் ஜோடி சேர்ந்த abhay-ஆளவந்தான் எல்லா மொழிகளிலும் தோல்வியை தழுவியது. சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல் ஜோடியாக இந்தி மற்றும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் மனிஷா நடித்தார் தனுஷ் நடிப்பில் ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக்கில் மூல படத்தில் ஸ்ரீவித்யா ஏற்று பெரும்புகழ் அடைந்த மைய கதாபாத்திரத்தில் மனிஷா நடித்திருந்தார் மலையாளம் கன்னடம் பெங்காலி மற்றும் நேபாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் மனிஷா கொய்ராலா பைசா வசூல் என்கிற ஹிந்தி படத்தை தயாரித்தும் இருக்கிறார் பார்த்தோ கோஷ் இயக்கத்தில் வெளிவந்த அக்னி சாட்சி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த dilse தமிழில் உயிரே என்று வெளியானது விதவிதமான காட்சிகளில் சின்னச் சின்ன நுட்பங்கள் முகமூடியின் மூலமாக சிறு இடைவெளிகளில் ஏற்படுத்தி அயரடிப்பதில் மனிஷா கொய்ராலா மறக்கமுடியாத தாரகை

THU MILE DIL KHILE‘ என தொடங்குகிற குமார் சானு சித்ரா பாடிய பாடல். தமிழில் “உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ” என மனோ சித்ரா பாடுவதாக மொழி மாறியது ஒருவிதமான பிரிவாற்றாமை ஏக்கம் காட்சிப்பிழை காதலில் கானல் தருணங்கள் என்று இந்த பாடல் நகர் திசை கவனிக்க தகுந்ததாக அமைந்தது SLIVER இன்று ஒரு ஷரன் ஸ்டோன் படம் 1093 வெளியானது அதில் E N I G M A  என்று ஒரு பாடல் இடம்பெற்றது. அதனை இன்றெல்லாம் கேட்கலாம்
Sharon Stone (@sharonstone) / Twitter

ஒரு மாதிரி காதலும் ஏக்கமும் தவிப்பும் தனிமையும் உலகளாவியது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தெலுங்கிலும் தமிழிலும் ஆக ஒலித்துக் கொண்டிருக்கிறது.இந்தப் பாடலின் தொடக்க ஹம்மிங் இடையிலே ஒலிக்கக் கூடிய ஆங்கில வசனம் என எல்லாமே காதலின் கசிந்துருகலைக் கிளர்த்தித் தருபவையாக ஒலித்தன.

Darling..,
Every Breath You Take
Every Move you make
I will be there with you
what will I do without you
I want to love you
forever and ever and ever

இந்த பாடல் எனக்கென்னவோ ஆங்கில மூலத்திற்கு அப்பால் மற்ற மூன்று மொழிகளிலும் ஏதோ ஒன்று சற்று குறைவது போலத்தான் தோன்றுகிறது என்னை இருந்தாலும் பாடல் என்பது முதல் முறை அல்லது ஒரு முறை நிகழ்வதுதான் இல்லையா.