Skip to content

ஜாஹீர் உசேன்

ஜாஹீர் உசேன்


ஜாஹீர் உசேன் என் கல்லூரி சீனியர். உற்ற நண்பர். அவருடைய தந்தை ஒரு தமிழ்க்கடல். பேச்சாலும் எழுத்தாலும் சிறந்து ஒளிர்ந்தவர். தமிழ்ச்செல்வன் என்ற பேரில் அவருடைய தமிழுரைகள் சொற்பொழிவுகள் பலரது மனங்கவர்ந்து நின்றவை.

நான் வசித்த திருநகர் பகுதி தான் ஜாஹீரின் இல்லமும் இருக்கிறது. திருநகரை விட்டு வந்து பதினாலு ஆண்டுகள் ஆனாலும் இன்றும் திருநகர் என்றதும் உடன் தோன்றுகிற சில நட்புகளுள் அவரும் ஒருவர். நான் படித்த முமு மேல்நிலைப்பள்ளியில் பின் நாட்களில் கணிப்பொறி பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றினார் ஜாஹீர்.

திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமியின் வகுப்புத் தோழரான ஜாஹீர் பிறகு அவரது படங்களின் மூலமாகத் திரைத்துறையில் தயாரிப்பு நிர்வாகியாக மாறினார். இப்போது தீவிரமாகத் திரைப்பணிகளில் இருக்கும் ஜாஹீர் பழகுவதற்கு இனியவர். எப்போதும் அணுகத் தகுந்த எளியவர். இன்று அவரது பிறந்த தினம் அவருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

வாழ்தல் இனிது