தென்பாண்டி சீமையிலே

    பாப்கார்ன் படங்கள்
4 தென்பாண்டிசீமையிலே


பல்கலை வேந்தர் கே.பாக்யராஜ் இன்னிசையில் உழைப்பாளர் பிலிம்ஸ் வழங்கும் தென் பாண்டிச்சீமையிலே கதை வசனம் இராம.நாராயணன் ஒளிப்பதிவு என்.கே.விஸ்வநாதன் பாடல்கள் வாலி திரைக்கதை இயக்கம் சி.பி.கோலப்பன்

No description available.

 

இந்தப் படத்தின் ஒரு சாம்பிள் காட்சி இங்கே

“தம்பி அனாவசியமா எங்க வழியில குறுக்கிடாத அப்பிடி குறுக்கிட்டா அட்ரஸே இல்லாமப் பண்ணிடுவோம்” என்பார் முதல் வில்லன்.
அப்பாவி வில்லன்.
விஜயகாந்துக்கு அந்த ஊரில் அட்ரஸ் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதைத் தெரிந்தும் தெரியாதது போல் அப்படிச் சொல்வார்

“ஏய் உங்க பூச்சாண்டிக்கெல்லாம் இந்த சிங்கம் பயப்படாது.
உறவுக்கு கைகொடுப்பேன்
உரிமைக்கு குரல் கொடுப்பேன்
தமிழுக்கு உயிர் கொடுப்பேன்
தன்மானத்துக்கு இடம் கொடுப்பேன்”

என்று ஸ்டைலாக தன் தொப்பி சரி செய்து கொள்வார் கேப்டன்

மொத்தம் மூன்று வில்லன்கள் = மூன்று மொட்டைகள்
(ஜெய்கணேஷ் விஜய் கிருஷ்ணராஜ் மற்றும் புதுமுகம் சுந்தரபாண்டியன்)
அவர்களில் நடுவான மொட்டை மிஸ்டர் ஜெய்கணேஷ் அவர் உடனே ரொம்ப நியாயமாக ஒன்று சொல்வார்

“உன்கிட்ட எனக்கு என்னடா பேச்சு ஏ பூசாரி சூடத் தட்டை கொண்டா” எனக் கேட்பார்
உடனே வில்லன்களை பார்த்து நடக்கும் பூசாரி நடுவில் டோல்கேட் போல் நிற்கும் விஜயகாந்தை பார்த்து அவரை தாண்ட முடியாமல் அப்படியே உறைந்து போய் நிற்பார். உடனே இடது ஓர மொட்டை பூசாரியை பார்த்து “ஏ பூசாரி உனக்கும் தைரியம் வந்துடுச்சா?” இன்று அதட்டுவார்.

பூசாரி அதற்கு “இந்த மாதிரி ஒரு வீரனை பார்த்தா கர்ப்பத்தில் இருக்கிற குழந்தை கூட கத்தி எடுக்கும் நான் எடுக்க மாட்டானா நானும் தமிழன் தான்யா”
என்று பதில் சொல்வார் 
நியாயவான் மூன்றாவது மொட்டை வில்லன் “இந்த சின்ன பையனுக்காக எங்களை பகைக்காதே” என்று சொல்வார்
உடனே கோபம் ரோஷம் கொண்ட ஹீரோயின் ராதிகா “சித்தெறும்பு கடிக்காதா?சிறு மொளகா உரைக்காதா?”
என்று கேட்பார்.

இப்போது மீண்டும் அதே நியாய மொட்டை “ஊருக்கு புதுசா வந்திருக்கிற… எங்களை பகைச்சிக்காதே” என்று நேரடியாக விஜயகாந்த் இடமே தெரிவிப்பார்.
இதற்கு மேலும் மீண்டும் அதிகம் கோபம் கொண்ட விஜயகாந்த் சயின்ஸ் பிக்சன் ஆக
“நார்ல்ல மாலையைத் தான் கட்ட முடியும் மதயானையை கட்டமுடியாது “என்பார்
“இந்த ஏழைகளை நம்பி போற” என்பார் முதல் வில்லன் “கெடமாட்டேன்” இது விஜய்காந்த்
“எவ்ளோ பணம் வேணாலும் தரேன்” என்ற வில்லனிடம் “தொட மாட்டேன்” இதுவும் விஜய்காந்த்.
“மோதுறது எரிமலை” எனும் வில்லனிடம் “விடமாட்டேன்” என மேற்கொண்டு சொல்வதும் விஜயகாந்த் விஜய்காந்தே.
“என்னிக்காவது எங்க வாசலைத் தேடி” எனும் அன்பான வில்லனிடம் “வரமாட்டேன்” என்பது வேறு யார்..? தி ஒன்லி கேப்டன் விஜய்காந்த்
“எங்களுக்கு மரியாதை” என்பார் வில்லர் “தரமாட்டேன்” என்று வீம்பாகப் பேசுவார் விஜய்காந்த் தி மோஸ்ட் டெரர்ஃபுல் ஹீரோ
கிட்டத் தட்ட வில்ல டீஸிங் செய்து அவர்களை விரட்டி விடுவார்.

Thenpandi Seemayile (1988) - IMDb

விஜய்காந்தை சப்போர்ட் செய்த பூசாரியை சப்போர்ட் செய்த ஊர்க்காரர்களைப் பழிவாங்க வில்ல மொட்டைகள் ஊர்க்கிணற்றில் விஷத்தைக் கலந்து விடுவார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வாய் பேசமுடியாத குழந்தை முத்துக்கண்ணு அங்கேயே நின்று கொண்டு சைகையாலேயே கிணற்றில் விஷத்தை மூன்று மொட்டைகளும் கலந்திருப்பதையும் அதைக் குடித்தால் செத்துப் போக வேண்டி வரும் என்றும் பல முறை எச்சரிக்கும். படம் பார்க்கும் எல்லாருக்கும் எளிதில் புரியும் அந்த விஷயம் தண்ணி எடுக்க வரும் அந்த ஊர்ப் பெண்களுக்கு சுத்தமாய்ப் புரியாது. தான் சொல்வதை திரும்பவும் ராதிகாவிடம் முத்துக்கண்ணு தெரியப்படுத்துவாள். அவருக்கும் புரியாது. உடனே குடத்தை கீழே கொட்டி விட்டு அந்தத் தண்ணீரைத் தான் குடித்த முத்துக்கண்ணு மெல்ல மயக்கமாவாள். அங்கே வரும் விஜயகாந்த் முத்துக்கண்ணு புரிய வைக்க முயன்றதைக் கஷ்டப்பட்டு புரிந்து கொள்வார். கிணற்றுச்சுவற்றில் மூன்று மொட்டைகளைக் குறிக்க மூன்று வட்டங்களை அல்லது மூன்று முட்டைகளை வரைந்திருக்கும் முத்துக்கண்ணு சற்று நேரத்தில் இறந்து விடுவாள். அப்புறம் தான் அந்த வாட்டரை செக் செய்து தண்ணி கலர் மாறியிருக்கு என்று திடுக்கிடுவார் விஜயகாந்த். முத்துக்கண்ணு சாவுக்கு நியாயம் கேட்டு வில்லன்ஸ் வீட்டுக்குள் அத்து மீறி நுழைவார் கேப்டன். அங்கே மறுபடி பேச்சு வார்த்தை நடக்கும் சைன்ஸ் பிக்சன் 2.0 பேச்சுவார்த்தை அது.

“உங்க பாவத்துக்கு மன்னிப்பு தரலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்ப அது தப்புன்னு புரிஞ்சிக்கிட்டேன்” எனப் பேச்சைத் தொடங்குவார் விஜய்காந்த்.

ஏன் என்று அப்ராணியாகக் கேட்பார் ஒன் பை த்ரீ மொட்டை.

அதற்கு சம்மந்தமே இல்லாமல் “கருப்புக்கு வெள்ளை அடிக்கலாம் இருட்டுக்கு வெள்ளை அடிக்க முடியாது” என்று பதில் சொல்வார் கேப்டன் தி வெறியர்

அப்பவும் நல்மனம் கொண்ட நவ நாகரீக மொட்டை நம்பர் ஒன் அலயஸ் ஜெய்கணேஷ் “ஏய் விஜய் எங்களைப் பகைச்சிட்டு இந்த ஊர்ல யாருமே இருக்க முடியாது” என்று தன் பழைய டயலாக்கையே மீண்டும் ஒரு தடவை உளறுவார்.அதைத் தொடர்ந்து மீண்டும் சம்மந்தமே இல்லாமல் “உனக்கு எவ்ளோ பணம் வேணாலும் கேளு குடுக்குறேன்” என்பார். அதற்கு கேப்டன் பதிலுக்கு அவரைப் பதிலாலேயே பழிவாங்குவார் “எனக்கு பணங்குறது மேல போட்டுக்கிற துண்டு மாதிரி.மானம் மரியாதைங்குறது இடுப்பில கட்டிருக்க வேட்டி மாதிரி..துண்டுக்காக வேட்டியை இழக்க மாட்டேன்” என்பார்.

அதற்கு மறுபுற மொட்டை நம்பர் 3  “ரோஷக்காரத் தம்பி பணம் வேணாங்குறே வேற என்னா தான் வேணுங்கிறே?” என்பார்.

now the real matrix starts…

விஜய்காந்த்:- ஏய் எந்தத் தூண்டில்லயும் சிக்காத மீன் நான்
மொட்டைஜெய்கணேஷ் ;- எல்லா மீனையும் முழுங்குற திமிங்கிலம் நான் என்பார்
உடனே கேப்டன் அந்தத் திமிங்கிலத்தையே கீறிப்பாக்க வந்த கத்திக்கப்பல் நான் என்று அசரடிப்பார்
அசராத ஜெயகணேசர் அந்தக் கத்திக்கப்பலையே ரெண்டு துண்டாக்குற வெடி குண்டு நான் என்பார்.
விடுவாரா நம்மாளு….அந்த வெடிகுண்டையே தூள் தூளாக்குற பீரங்கி நான் என்று கர்ஜிப்பார்.
அப்பவும் அந்த தாராள மனம் கொண்ட மொட்டை விஜய் நீ இந்த ஏழை ஜனங்களை நம்பிப் போற ஏமாந்துருவ என்று தன் சொந்தத் தலையையே தடவிக்காட்டி சொல்வார்.
அதற்கு மேலும் பிலாசஃபிகலாக பதில் சொல்வார் கேப்டன் துருப்பிடிக்கிறதை விடத் தேயுறதே மேலன்ற முடிவுக்கு ஜனங்க வந்துட்டாங்க”
மக்களை அழிச்சிருவேன் என்று வில்லன்ஸூம் அவங்களை காப்பாத்திருவேன் என்று விஜயகாந்தும் மாறி மாறி சவால் விட்டுக் கொள்வார்கள்.

அதற்கடுத்த காட்சியில் விஜயகாந்தை நீங்க கெளம்புங்க என்று ஊரை விட்டு அனுப்பப் பார்ப்பார்கள் தி சேம் ஏழை ஜனங்கள்.
“ப்ளீஸ் போங்க..போயிருங்க போயித் தொலைங்க” என்பர்.

உடனே அங்கு வரும் வில்லன்ஸ் ஒரு பெண்ணைக் கொல்லப் பார்க்க அவரை கேப்டன் காப்பாற்ற உடனே உங்களை போகச்சொன்னது தப்புங்க என்று மறுபடி விஜய்காந்தை ஊர்லயே இருந்துருங்க என்று முடிவெடுப்பார் பூசாரி. அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் கழித்துப் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து மூன்று வில்லன்ஸையும் பஜ்ஜி செய்வதோடு படம் முடியும்.

(இங்கே கிளிக் செய்து காட்சியைப் பார்த்து இன்புறலாம்)