ரவி சுப்ரமணியன்
நாளை மறுதினம் 08/03/2026 அன்று மதுரையில் ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறேன். நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.
நாளை மறுதினம் 08/03/2026 அன்று மதுரையில் ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறேன். நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.
யாக்கை 32 பரமபதம் கலிவரதனை இரக்கமில்லாமல் துள்ளத் துடிக்க கொலை செய்த ஐவரில் இரண்டு பேர் இறந்து விட்டதால் மீதமுள்ள மூன்று பேரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பை வாசித்த போது மூவரின் முகங்களிலும் சலனமே இல்லை.… Read More »யாக்கை 32
மனம் வேறு கவிதை வேறு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் கவிஞர், நிஜம் போலவே நிகர் செய்யும் புகைப்படக் கலைஞர், அய்யப்ப மாதவன் நலநிதி ஒன்றை ஒழுங்கு செய்து வருகிறார்கள். புது எழுத்து மனோன்மணி அதனை திரட்டி வருகிறார். இது குறித்து கவிஞர்… Read More »அய்யப்ப மாதவன் நலநிதி
யாக்கை 31 அனாகதம் மூர்த்தியைக் காணவில்லை என்று அவன் மனைவி இந்திரா வந்து சொன்ன போது கிண்டல் செய்கிறாள் என்றுதான் அவள் முகத்தை ஏற ஏற பார்த்தான் கதிர். காணாமல் போகிற வயசா இது? அவன் உதடுகள் முணுமுணுத்தன ‘இதை… Read More »யாக்கை 31
சமீபத்து ப்ரியக்காரி 21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல் 1 ஸ்டெல்லா என்பது யார் யார் கேட்டாலும் எந்த பதிலும் சொல்வதில்லை என்பது நெடுங்காலப் புகார் 2 ஒரு ஸ்டெல்லா ஒரு போதும் ஸ்டெல்லா என்பது யார் எனக் கேட்க மாட்டாள் என்பதொரு… Read More »21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்
வாசகபர்வம் 3 ஜூடாஸ் மரம் மலர்விழி வேரல் புக்ஸ் முதல் பதிப்பு டிசம்பர் 2022 120ரூ யாராலும் எழுத முடியாத வரிகள் கவிதை எழுதுபவர்களுக்கு கண்ணில் படுவதெல்லாம் கருப்பொருளாய் மாறத்தக்கவையே. மெக்கானிக் ஒருவரது அழுக்கேறிய டூல்ஸ்… Read More »யாராலும் எழுத முடியாத வரிகள்
தானாய்ச் சுழலும் இசைத்தட்டு அர்ஜித் சிங் பாட்டென்பது பைத்தியத்தின் கையெழுத்து. சிந்தியுங்கள். யாரென்றே தெரியாத ஒரு முகத்தை உள்ளுறையும் ஒரு மனதை அவரது குரலை மாத்திரம் அறிந்துகொள்வதன் மூலமாகத் தன் மனசு மொத்தத்தையும் எழுதித் தருவதற்குச் சம்மதிக்கிற பித்து தானே இசை… Read More »அர்ஜித் சிங்
யாக்கை 30 நீர்ப்பூக்கள் ஜே.பி.முத்து பொதுவாக க்ரைம் வழக்குகளில் ஆஜராவதில்லை. கட்சி மேலிடம் இந்த வழக்கை அவர்தான் நடத்தவேண்டும் என்று ஆரம்பத்திலேயே நிர்ப்பந்தித்து விட்டது. அப்படி ஒன்று நடந்திராவிட்டால், இம்மாதிரி வழக்குகளை நிச்சயம் தவிர்த்திருப்பார். ஸ்பீடு சங்கரன் முத்துவின் அணுக்க… Read More »யாக்கை 30
அந்தக் கதை உன் வாழ்வின் மறக்க முடியாத நாள் எது? என்று கேட்ட அந்த மனிதனை முற்றிலும் வெறுக்க தொடங்கி இருந்தேன். மிகப் பழைய கருப்பு வெள்ளை இங்கிலீஷ் சினிமாக்களில் தான் இவனைப் போன்ற அழுக்கான கோமாளிகளை பார்த்திருக்கிறேன். இந்த நகரத்துக்கு… Read More »அந்தக் கதை
எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி அம்மாதான் என் ஆதார நாயகி. அவளுக்கு அவளுடைய அம்மா. எங்களுக்கு அவள். மிகச் சுருக்கமான உலகம் அவளுடையது. கண்மூடித்தனமான நம்பிக்கை, அதீதமான பக்தி, வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற உத்வேகம். எப்போதாவது முற்றிப்போகும் சண்டையின் முடிவுத்… Read More »எனக்குள் எண்ணங்கள் 21