Skip to content

சமீபத்து ப்ரியக்காரி 14
அதுவாதல்


எனக்குச் சொந்தமான தொப்பி.
அதை நானே செய்தேனா எனில் இல்லை.
எனக்குச் சொந்தமான தொப்பியின் இறகுகள்
எங்கெங்கிருந்தோ சேகரமானவை.
எனக்குச் சொந்தமான தொப்பியில்
எழுதப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு வாசகத்தின் சொற்கள் மொழியினுடையவை.
எனக்குச் சொந்தமான இரு கரங்களால்
அந்தத் தொப்பியை நான் சூடிக் கொள்கிறேன்.
அந்தக் கரங்கள் என் சந்ததி தந்தவை.
இந்த உடலும்
உள்ளார்ந்த மனமும்
இந்தக் கவிதையும்
இன்னும் நேராத அதன் பூர்த்தியும்
எனக்குச் சொந்தமென்றெதுவுமில்லை காண்,

எனக்குச் சொந்தமானதென்று
ஒன்றே ஒன்று உண்டு.
இந்தப்ரபஞ்ச முழுவதிலும்
எனதேயெனதான ஒன்றேயொன்று
அது காதல்.