Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

அர்ஜித் சிங்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு அர்ஜித் சிங் பாட்டென்பது பைத்தியத்தின் கையெழுத்து. சிந்தியுங்கள். யாரென்றே தெரியாத ஒரு முகத்தை உள்ளுறையும் ஒரு மனதை அவரது குரலை மாத்திரம் அறிந்துகொள்வதன் மூலமாகத் தன் மனசு மொத்தத்தையும் எழுதித் தருவதற்குச் சம்மதிக்கிற பித்து தானே இசை… Read More »அர்ஜித் சிங்

யாக்கை 30

யாக்கை 30 நீர்ப்பூக்கள்   ஜே.பி.முத்து பொதுவாக க்ரைம் வழக்குகளில் ஆஜராவதில்லை. கட்சி மேலிடம் இந்த வழக்கை அவர்தான் நடத்தவேண்டும் என்று ஆரம்பத்திலேயே நிர்ப்பந்தித்து விட்டது. அப்படி ஒன்று நடந்திராவிட்டால், இம்மாதிரி  வழக்குகளை நிச்சயம் தவிர்த்திருப்பார். ஸ்பீடு சங்கரன் முத்துவின் அணுக்க… Read More »யாக்கை 30

அந்தக் கதை

அந்தக் கதை உன் வாழ்வின் மறக்க முடியாத நாள் எது? என்று கேட்ட அந்த மனிதனை முற்றிலும் வெறுக்க தொடங்கி இருந்தேன். மிகப் பழைய கருப்பு வெள்ளை இங்கிலீஷ் சினிமாக்களில் தான் இவனைப் போன்ற அழுக்கான கோமாளிகளை பார்த்திருக்கிறேன். இந்த நகரத்துக்கு… Read More »அந்தக் கதை

எனக்குள் எண்ணங்கள் 21

எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி அம்மாதான் என் ஆதார நாயகி. அவளுக்கு அவளுடைய அம்மா. எங்களுக்கு அவள். மிகச் சுருக்கமான உலகம் அவளுடையது. கண்மூடித்தனமான நம்பிக்கை, அதீதமான பக்தி, வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற உத்வேகம். எப்போதாவது முற்றிப்போகும் சண்டையின் முடிவுத்… Read More »எனக்குள் எண்ணங்கள் 21

யாக்கை 29

யாக்கை 29 எத்தனை வழிகள்   மூர்த்தி தன் அருகே யாரோ நடந்து வந்து நிற்பதை உணர்ந்தான். கண்களைத் திறக்கவில்லை. நெடு நேரமாக அவன் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். எப்போதோ அழுது, அழுததை நிறுத்திய பிற்பாடு தன் கண்களை மூடி, உறக்கம்… Read More »யாக்கை 29

6 கங்கை அமரன்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு 6 செந்தூரக்கவி கங்கை அமரன்   நாடு சுதந்திரம் பெற்ற 1947 ஆம் வருடம் டேனியல் ராமசாமி சின்னத்தாயி தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்த அமர் சிங் பிற்காலத்தில் கங்கை அமரன் ஆனார். இவருக்கு மூத்தவர்கள் இளையராஜா,ஆர்.டி.பாஸ்கர்… Read More »6 கங்கை அமரன்

வீ சேகர்

வீ சேகர்; பொருட்படுத்த வைத்த கலைஞன் தன்னுடைய முதல் படமாக நீங்களும் ஹீரோதான் என்ற தலைப்பிட்டு மிகக் காத்திரமான ஒரு கதையினைத் தேர்வு செய்து இயக்குனராக அறிமுகமானவர் வி சேகர். முதல் படம் இயக்குபவர்கள் வசூலும் பேரும் புகழும் முக்கியம் என்று… Read More »வீ சேகர்

யாக்கை 28

யாக்கை 28 தொட்டிச்செடி மலைக்கண்ணன் உடலை கட்டாகப் பேணுபவர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. வயதுக்கு பொருத்தமில்லை என்று எளிதில் சொல்லத்தக்க ஆடைகள் கூட அவருக்கு பொருந்தித்தான் போயின. நீல நிற ஜீன்ஸ்,டக்-இன் செய்த கருப்பு முழுக்கை சட்டை. கைகளை முஷ்டிக்கு… Read More »யாக்கை 28

20.பண்டிகை தினத்துப் புன்னகை

சமீபத்துப் ப்ரியக்காரி 20 பண்டிகை தினத்துப் புன்னகை கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும் அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?… Read More »20.பண்டிகை தினத்துப் புன்னகை

எனக்குள் எண்ணங்கள் 20

எனக்குள் எண்ணங்கள் 20 கிளியும் சீட்டும் பின்னே தீபாவளியும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு மிகச்சரியாக ஒரு மாதம் முன்பிருந்தே கொண்டாட்ட ஜூரம் தொடங்கி விட்டது. பெரியவர்களுக்கு மட்டும் தான் செலவினங்கள் பற்றிய கவலை என்று எண்ண வேண்டாம். பதினாலு வயதிலிருந்த எனக்கும்… Read More »எனக்குள் எண்ணங்கள் 20