Skip to content

ஆத்மார்த்தி

யாக்கை 18

யாக்கை 18 ஓங்கிய வாள்நுனி சிந்தாமணி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு செல்வாவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இடம் பொருள் ஏவல் எல்லாம் மறக்கடிக்கும் பார்வை. இவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள்? எத்தனையோ தழுவிய பின்னர் எத்தனையோ முத்திட்ட பின்னர் எவ்வளவோ கூடிக்… Read More »யாக்கை 18

இரண்டு மைதிலிகள்

இரண்டு மைதிலிகள் என் பேர் மைதிலி.மிசஸ் மைதிலி சிவபாதம்.என்னைப் பெண் பார்க்க வந்த அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலத்தை இன்னமும் என்னால் மறக்க முடியலை.மொத்த வாழ்க்கைல ஒரே ஒரு தினம் மாத்திரம் செஃபியா கலர்ல மாறிட்டுது.எவ்ளோ முயற்சி பண்ணாலும் அதைப் பத்தின ஞாபகம்… Read More »இரண்டு மைதிலிகள்

இன்னொரு நந்தினி

இன்னொரு நந்தினி பெருமழைக்காலத்தின் ஆரம்ப கணங்களைப் பெரிய கண்ணாடிச்சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ்.”பாக்கணும்டா” ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காஃபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக் கொண்டு மறுபடி மழை பார்க்க வந்தேன்.இன்னும் ஆரம்பிக்கவில்லை.மழைக்கு முந்தைய… Read More »இன்னொரு நந்தினி

யாக்கை 16

யாக்கை 16 துன்பச்சகதி எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி… Read More »யாக்கை 16

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன்… Read More »தேடிச்சிறத்தல்

பொம்மை மடி

     பொம்மை மடி     “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி

யாக்கை 14

யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14

யாக்கை 3

பாம்பும் புலியும் இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில… Read More »யாக்கை 3

குமுதம் தீராநதி

குமுதம் தீராநதி இந்த {செப்டெம்பர் 2022} இதழில் கதை சொல்லும் கவுண்ட்டர்கள் என்ற தலைப்பில் சினிமா டிக்கட் கவுண்டர்களில் 80-90களில் காணக்கிடைத்த அனுபவச்சித்திரங்களை மையப்படுத்தி நான் எழுதிய கட்டுரை வெளியாகி உள்ளது.  

மூன்று நிகழ்வுகள்

மூன்று நிகழ்வுகள் 02/09/2022 வெள்ளிக்கிழமை மாலை மதுரை மீனாட்சி கருத்தரங்கக் கூடத்தில் தீபா நாகராணி எழுதிய சிறுகதைத் தொகுதி மரிக்கொழுந்து,கற்பகம்,அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக வெளியிடப் பட்டது. திரு.ரத்னவேலு அவர்களின் சார்பாக அந்த நூலின்… Read More »மூன்று நிகழ்வுகள்