Skip to content

    சதுரங்கநாய்
_________________

பேச்சுவாக்கில் “சதுரங்கநாய்” என்றேன்.
“அதென்னது?” முகம் சுளிக்கிறீர்கள்.
ஒவ்வொரு ஆட்டத்தின் போதும்
சதுரங்கப் பலகையைச்
சுற்றிச் சுற்றி
யாராவது தன்னையும்
அந்தக் கட்டங்களினூடே
அனுமதிக்க மாட்டார்களா?வென
காலங்காலமாய்
வந்து வந்து
அல்லாடுகிற
ஆட்டமறியா
நாய்ஜென்மத்தை
நீங்கள்
கண்ணுறவில்லை தானே